கூகுளின் டிரைவர் இல்லாத காரில் பயணித்த பிரேசில் அதிபர்
கலிபோர்னியா: பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், கலிபோர்னியா கூகுள் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு கூகுளின் தானே இயங்கும் காரில் பயணம் செய்தார்.
கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன.

மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரைப் போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா, நிவாடா ஆகிய மாகாணங்கள் மட்டுமே சட்ட ஒப்புதலைத் தந்துள்ளன.

இந்நிலையில், கலிபோர்னியாவில் கூகுளின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப். அங்கு டிரைவர் இல்லாமல் இயங்கும் கூகுளின் தானியங்கி காரில் ஏறி சிறிது தூரம் அவர் பயணம் செய்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications