இவர்களில் யார் அடுத்த "கிம்" கர்தஷியான்??.. ஒரு அடேங்கப்பா போட்டி!

Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: அழகுப் பெண்களின் குவியல் நாடான பிரேசில் நாட்டில் ஒரு நூதனமான போட்டி நடைபெறவுள்ளது. அதில் 27 ஒய்யார அழகிகள் பங்கேற்க உள்ளனர்.

போட்டிக்கு என்ன பெயர் தெரியுமா.. "மிஸ் பம் பம் பிரேசில் 2014". இதற்கு மேல் இந்தப் போட்டி எதற்காக என்று விளக்கத் தேவையில்லை.

அதேதான்.. அழகிய பின்புறத்தைக் கொண்ட அழகியைத் தேடும் போட்டி இது. கிட்டத்தட்ட விஜய் டிவியில் வரும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போல, இவர்களில் யார் அடுத்த கிம் கர்தஷியான் என்பதற்கான தேடல்தான் இது.

பின்னழகில் பிரமாதமாக இருப்பவர் கிம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே இந்த பிரேசில் பின்னழகுப் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் அந்த நாட்டில் கிளறி விட்டுள்ளது.

பரிசுத் தொகை 22,000 டாலர்

பரிசுத் தொகை 22,000 டாலர்

முதல் பரிசாக 22,000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மிஸ் பம் பம் பட்டம் பெறுவோர், உலகப் புகழும் பெறும் வாய்ப்பு உள்ளது.

பிரேசிலின்

பிரேசிலின் "பெஸ்ட்" பின்னழகி..

இந்தப் போட்டி பிரேசில் நாட்டிலேயே அபாரமான பின்னழகு கொண்ட அழகியைத் தேர்வு செய்வதற்குத்தான் என்று போட்டி அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

ஆன்லைனில் ஓட்டுப் போடலாம்

ஆன்லைனில் ஓட்டுப் போடலாம்

சிறந்த பின்னழகியைத் தேர்வு செய்ய ஆன்லைன் வாக்கெடுப்பு அமல்படுத்தப்படும். இறுதிப் போட்டிக்கு 15 அழகிகள் தேர்வு செய்யப்படுவர்.

நவம்பரில் இறுதிப் போட்டி

நவம்பரில் இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி நவம்பர் மாதம் நடைபெறும். அதில் இந்த 15 பேரிலிருந்து ஒருவர் மிஸ் பம் பம் ஆக தேர்வு செய்யப்படுவார்.

4வது வருடமாக

4வது வருடமாக

4 வது வருடமாக இந்தப் போட்டி இந்த வருடம் நடைபெறவுள்ளது.

மேகான் பாக்ஸ் போல கிளாடியா

மேகான் பாக்ஸ் போல கிளாடியா

இந்த வருடப் போட்டியில் 27 அழகிகள் கலந்து கொண்டு தங்களது பின்னழகை வெளிப்படுத்தக் காத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் கிளாடியா அலென்டே. இவர் கிட்டத்தட்ட பார்க்க மேகான் பாக்ஸ் போலவே இருக்கிறார்.

இரட்டை அழகிகள்

இரட்டை அழகிகள்

அதேபோல இரட்டையரான அழகிகள் கிரேசியெல்லா மற்றும் ரபேல்லா ஆகியோரும் கவனிப்புக்குரியவர்களாக உள்ளனர். பெரிய சைஸ் அழகியான ஜூலியானா பிட்டெஇன்கோர்ட்டும் முக்கியமானவர்.

39 வயதில்

39 வயதில்

அதேபோல 39 வயதான பாட்ரிசியா ஒலிவியராவும் முக்கியமானவராக திகழ்கிறார். அதிக வயதுடைய அழகி இவர் மட்டுமே. ஆனாலும் அபாரமான பின்னழகுடன் கலக்குகிறார்.

பார்க்கலாம்.. யாருக்கு "பெஸ்ட் பாட்டம்" பட்டம் கிடைக்கப் போகிறது என்று...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+