"ஆசை 90 நாள்".. கல்யாணம் செய்ய ஒரு ஆணும் கிடைக்கல.. மாடல் அழகி எடுத்த திடீர் முடிவும், விளைவும்
தன்னை தானே விவாகரத்து செய்து கொண்டுள்ளார் மாடல் அழகி ஒருவர்
பிரஸ்ஸெலா: மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பார்களே.. அதுபோலதான் இங்கும் 90 நாளில் முடிவுக்கு வந்துள்ளது ஒரு பெண்ணின் திருமண வாழ்வு.. திருமணம் செய்து கொள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை என்பதற்காக, தன்னை தானே கல்யாணம் செய்து கொண்டார் மாடல் அழகி.. பிறகு உடனே தன்னை விவாகரத்தும் செய்து விட்டார்.. இந்த விவாகரத்துக்கு இவர் கூறிய காரணம்தான் சற்று வித்தியாசமானது..!
உலக ஃபேமஸ் ஆவதற்காக வித்தியாசமான முயற்சிகளை சிலர் மேற்கொள்வார்கள்.. சிலர் ஆபத்தான செயலிலும், சிலர் அபார ஆற்றலிலும் பல்வேறு செயல்களை புரிந்து, உலக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவார்கள்.
ஆனால், உயிரை பணயம் வைத்து சாகசம் புரிவோரைவிட, மேலும் சிலர் மகா மட்டமான காரியங்களை செய்தே பரபரப்பாக பேசப்பட்டு விடுவார்கள்.. அதுபோல் நிறைய பேர் உண்டு.

குக்கர்
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர், அரிசி வேக வைக்கும் குக்கரை கல்யாணம் செய்து கொண்டார்.. இது தொடர்பான போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. அந்த போட்டோவில் மாப்பிள்ளை கோலத்தில் காணப்பட்ட அந்த இளைஞர், கையோடு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஒரு குக்கரை முக்காடு போட்டு கொண்டு ரிஜிஸ்தர் ஆபீசுக்கு க்ஷகாண்டு வந்தார்... திருமணமும் செய்து கொண்டார்.

அரிசி குக்கர்
இதற்கு இவர் சொன்ன காரணம், "குக்கர் நான் சொல்வதை எல்லாம் கேட்கிறது.. குக்கர் வெள்ளையாக இருக்கிறது.. எனக்கு சாப்பாடு வேகவைத்து தருகிறது.. என்னிடம் அன்பாக இருக்கிறது" என்றார். பிறகு கல்யாணம் செய்த 4 நாட்களிலேயே அந்த குக்கரை டைவர்ரஸ் செய்துவிட்டார்.. அதற்கு அவர் சொன்ன காரணம், அந்த குக்கர் அரிசியை மட்டுமே வேக வைக்கிறது, அதனால்தான் விவாகரத்து செய்துவிட்டதாக விளக்கம் தந்தார்.

இளம்பெண்
அதாவது, சோஷியல் மீடியாவில் தான் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் ஏதாவது வித்தியாசமாக செய்வது வழக்கம்.. பிரேசிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்கும் ஒரு இளம்பெண்ணுக்கு நடந்த திருமணம்தான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. கடந்த செப்டம்பர் மாதம் அந்த நாட்டின் மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.. அவர் பெயர் கிறிஸ் கலேரா.. 31 வயதாகிறது. தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இந்த செய்தி பெரும் பரபரப்பை அன்றைய தினம் ஏற்படுத்தி இருந்தது..

திருமணம்
காரணம் அவர் சொல்லியிருந்த விளக்கம் பலரை திரும்பி பார்க்க வைத்தது. "எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை.. ஆனால், எந்த ஒரு ஆண்மகனும் தனக்கு திருமணம் செய்ய கிடைக்கவில்லை... அதேசமயம் எனக்கு தனித்து வாழவும் கொஞ்சம் பயமாக இருந்தது... ஆனால் அதுவே இப்போது பழகி போயிடுச்சு.. அதனால் நானே என்னை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன்.. அதற்காக நானே என்னை திருமணம் செய்து கொண்டேன்" என்று அறிவித்தார்.

காதல்
இப்போது விஷயம் என்னவென்றால், கல்யாணம் செய்து 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தன்னை தானே டைவர்ஸ் கேட்டுள்ளார் இந்த அழகி.. இதற்கு இன்னொரு காரணத்தையும், இவரே சொல்கிறார்.. "எனக்கு இப்போது காதல் மீது நம்பிக்கை வந்துவிட்டது.. காதல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துவிட்டேன்.. அவரை பார்த்தபிறகுதான் இந்த நம்பிக்கை எனக்குள் வந்தது.. அதனால், நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பரபரப்பு
மாடல் அழகியின் இந்த அறிவிப்பும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.. இதற்கு ஏராளமான கருத்துக்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.. இளம்பெண்ணின் புது காதலுக்கு, தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.. திருமணம் செய்ய ஆண்மகன் யாரும் கிடைக்கவில்லை என்பதற்காக, தன்னை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டதும், பிறகு 90 நாட்களுக்குள் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்டுள்ளதும் பெரும் பரபரப்பை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications