மார்பகத்தை அகற்றும் ஆண்.. கருவறையில் சுரந்த தாய்மை.. இங்கிலாந்தில் ஒரு வினோதம்
மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்கிறார் ஹைடன்.
லண்டன்: குழந்தை பெற்றெடுத்த உலகின் முதல் ஆண் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைடன் தற்போது தன்னுடைய மார்பகத்தை அகற்ற போகிறாராம்.
போன வருடம் "நான் அம்மா ஆயிட்டேன்" என்று வெட்கம் பொங்க சிவந்த முகத்துடன் சொன்ன ஆண்மகன்தான் ஹைடன். இவருக்கு இப்போது வயது 22.

கொள்ளை அழகு மங்கை
4 வருஷத்துக்கு முன்னாடி வரை பெண்ணாகத்தான் இருந்தார். அதுவும் கொள்ளை அழகு மங்கையாக இருந்தார். ஆனால் இவரது உடலில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் நேராக மருத்துவமனை சென்று ஆணாக மாறும் ஆபரேஷனை செய்து கொண்டார்.

கிறுகிறுக்க வைத்தது
ஆணாக மாறினாலும் அதே அழகுடன்தான் இருந்தார் ஹைடன். போன வருடம், பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது கர்ப்பப்பையில் செலுத்தி கொண்டு அதன் மூலம் கர்ப்பமும் ஆனார். ஒரு ஆண் கர்ப்பம் தரித்திருக்கிறார் என்ற தகவல் உலகம் முழுவதும் பரவி எல்லாரையுமே கிறுகிறுக்க வைத்தது. அம்மா ஆன சந்தோஷத்தில் ஹைடன் பலவித போஸ்களில் போட்டோக்களை எடுத்து உலவவிட்டார்.

ஏக்கம் கலந்த வார்த்தை
அப்போது ஒரு பேட்டியில், "இந்த குழந்தையை நான் பெற்றெடுத்த பிறகு, அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும், நடந்துகொள்ளும் என்று எனக்கு புரியவில்லை. ஏனெனில் உலகில் கீழ்மை எண்ணமும் சிறுபுத்தியும் கொண்டவர்கள் அதிகம்" என்று ஒரு வித ஏக்கம் கலந்த வார்த்தைகளை ஹைடன் சொல்லி இருந்தார். ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் இங்கிலாந்தில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையும் இவருக்கு வந்து சேர்ந்தது.

தாயும்-தந்தையுமான ஹைடன்
இந்நிலையில் தற்போது தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் செய்ய உள்ளார். முதற்கட்ட சிகிச்சை கூட முடிந்துவிட்டதாம். இந்த ஆபரேஷனுக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 18 லட்சம் செலவாகிவிட்டதாம். இன்னும் கடைசியாக ஒரே ஒரு ஆபரேஷன்தான் பாக்கியாம். அதுவும் முடிந்துவிட்டால், "என்னை நான் முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடியும் "என்கிறார் இந்த நவீன தாயும்-தந்தையுமான ஹைடன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications