G-Pay மாதிரி BRICS PAY.. கேம் சேஞ்சராக மாறும் பிரிக்ஸ் நாடுகள்! வாய் பிதுக்கும் டிரம்ப்
மாஸ்கோ: கடைகளில் பொருட்களை வாங்க கூகுள் பே பயன்படுத்திறோம். அதேபோல பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு பிரிக்ஸ் பே (BRICS-Pay) முறையை பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது மட்டும் ஒர்க்கவுட் ஆகிவிட்டால், இனி நாம் டாலரை நம்பிக்கொண்டிருக்க தேவையில்லை. இந்த பேமன்ட் சிஸ்டத்தால் வேறெந்த நாடுகளை விட இந்தியாவுக்குதான் அதிக லாபம் இருக்கும்.

மாற்றுக்கான காரணம் இதுதான்
இப்போது வரை ஆசிய நாடுகள் பல, SWIFT பேங்கிங் மெசேஜிங் அமைப்பைதான் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகின்றன. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணம் அனுப்ப இந்த அமைப்பு பயன்படுகிறது. சிக்கல் என்னவெனில், இது மேற்கு நாடுகளின் அமைப்பு. எனவே கட்டணம் அதிகம், மட்டுமல்லாது கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் அதிகமாக இருக்கிறது. எனவே மாற்று பண பரிவர்த்தனை அமைப்பை பிரிக்ஸ் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.
பிரிக்ஸின் பிளான் என்ன?
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். பிரிக்ஸ் நாடுகளுக்குள் நேரடி வர்த்தக பரிவர்த்தனை வேண்டும். அதேநேரம் SWIFT போன்ற மேற்கத்திய கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை தவிர்க்கவும் வேண்டும். எனவேதான் பிரிக்ஸ் பே எனும் அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் உருவாக்க தொடங்கியுள்ளன.
இது பிளாக்செயின் மற்றும் டிஜிட்டல் கரன்சியின் அடிப்படையில் செயல்படும். அதாவது நம்மூரில் ரிசர்வ் பேங்க் இருப்பதை போல, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் மத்திய வங்கி இருக்கிறது. இந்த வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். உதாரணத்திற்கு
1. ரஷியாவின் Digital Ruble
2. சீனாவின் Digital Yuan
3. இந்தியாவின் Digital Rupee (E-Rupee)
4. பிரேசிலின் Digital Real
5. தென்னாப்பிரிக்காவின் Digital Rand
ஆகியவை வெளியிடப்படும் இதை வைத்து ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே பரிவர்த்தனை நடைபெறும்.
பரிவர்த்தனையில் பாதுகாப்பு
இந்த பரிவர்த்தனை பாதுகாப்பானதாக இருக்கும். தனிப்பட்ட Blockchain அடிப்படையில் இது நடக்கும். SWIFT பேங்கிங் அமைப்பில் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். ஆனால், பிரிக்ஸ்-பே அமைப்பில் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கும். தற்போது பிரிக்ஸ் அமைப்பில் 10 நாடுகள் இருக்கின்றன. எந்த நாடும் மற்ற நாட்டின் பரிவர்த்தனையை தடுக்க முடியாது. இதற்காக தனி வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. BRICS Digital Wallet உருவாக்கப்பட்டு அதன் மூலம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம்.
இது Google Pay / PayTM / WeChat Pay போன்ற மொபைல் வாலட் போன்று செயல்படும்.
டாலருக்கு மாற்று
இந்த அமைப்பு டாலருக்கு மாற்றாக இருக்கும். அதாவது பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி நாணயமோ/கரன்சியோ உருவாக்கப்படாது. அதற்கு பதிலாக சொந்த நாட்டின் பணமே, டிஜிட்டல் வடிவில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு நாம் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குகிறோம். அதற்கான பணத்தை டாலரில் கொடுப்பது கிடையாது. மாறாக சொந்த ரூபாயில்தான் கொடுத்து வாங்குகிறோம். இதனை டிஜிட்டல் வடிவில் செய்வதுதான் பிரிக்ஸ் பே.
இப்போது வரை ரஷ்யா-சீனா உள்ளிட்ட நாடுகள் டிஜிட்டல் வடிவில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றன. 95% பரிவர்த்தனை இப்படித்தான் நடக்கிறது. இப்போது வரை 2 நாடுகளுக்கு இடையே உள்ள இந்த நடைமுறை 10 நாடுகளுக்கு மாறினால் டிரம்ப் நிச்சயம் பதற்றமடைவார்.
எல்லா நாடுகளும் சொந்த கரன்சியில் பண பரிவர்த்தனையை மேற்கொண்டால் அது அமெரிக்க டாலருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே இந்த யோசனையை கேட்ட டிரம்ப் ஆடிப்போயிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications