அமெரிக்க ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரிக்ஸ் மாநாடு! டாலருக்கு பதில் இனி இதுதான்
காசான்: ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும் என சொல்லப்படுகிறது.
உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சி உலக வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு, ஒரு திட்டத்தை செல்படுத்துகிறது எனில், அதற்காக உலக வங்கி வழங்கும் பணம் டாலரில்தான் இருக்கும். நாம் இதை வாங்கி, இந்திய பணமாக மாற்றி பின்னர் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு நாடும், சர்வதேச அளவில் பொருளாதார தொடர்பு கொள்ளும்போது டாலர்தான் முன்வந்து நிற்கிறது.

இதன் காரணமாக உலக நாடுகளில் 60% நாடுகள் டாலரை இருப்பு வைத்திருக்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வரும்போது இருப்பு வைத்திருக்கும் டாலரை கொண்டு அதை சரி செய்துக்கொள்கின்றன. மறுபுறம், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே உலக நாடுகள் மத்தியில் டாலருக்கு என்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. இது பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சி, நமது ரூபாயை மதிப்பற்றதாக மாற்றிவிடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது. எனவே, இதனை சரி செய்ய, டாலருக்கு எதிராக புதிய ரூபாய் நோட்டுக்களை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயன்றுள்ளன. குறிப்பாக ரஷ்யா இதற்காக தீவிரமாக முயன்று வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா வர்த்தம் மேற்கொள்ளும்போது, அந்தந்த நாட்டின் பணமாக கொடுத்தால் போதுமானது என்று கூறியிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தக பரிமாற்றத்தை மேலும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான ரூபாய் நோட்டை உருவாக்க ரஷ்யா யோசித்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டில் 5 நாடுகளின் கொடியும் இடம்பெற்றிருக்கும். இதை கொண்டு இந்த 5 நாடுகளுக்குள் பண பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இது டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் காசன் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்ஸ் தலைவர்களிடம் காட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை யார் யார் எல்லாம் அச்சடிக்க முடியும்? இதற்கு தலைமை அலுவலகம் எங்கு இருக்கும்? போலி ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி தடுப்பது? பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகள் சேர்ந்தல் அவர்களுக்கும் இந்த ரூபாய் பொருந்துமா? என பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கு ரஷ்யா பதில் அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
தற்போது வரை இந்தியா ரூபாயையும், சீனா யுவானையும், ரஷ்யா ரூபிளையும், பிரேசில் ரெயாலையும், தென் ஆப்பிரிக்கா ராண்ட்டையும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications