"நியூலி வெட்" கேள்விப்பட்டிருக்கோம்.. இது "நியூட்லி வெட்" ஜோடியின் கதை!
இத்தாலியில் நிர்வாணமாக ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது.
மிலன்: கலிகாலம் முத்தி போயிடுச்சு. எத்தனையோ முறைகளில், இடங்களில், வகைகளில் கல்யாணத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியில் நடந்திருக்கிற ஒரு கல்யாணம் இதுவரை உலகத்திலே எங்குமே நடக்காத ஒன்று.
இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் 34 வயதான இவருக்கு ஆர்சன் என்ற ஒரு காதலி உள்ளார். அவருக்கு வயது 29. ரெண்டு பேருக்குமே நீண்ட காலமாகவே டீப் லவ். கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டனர்.

காதலர்கள் திருமணம்
அதற்காக ஒரு தீவையும் கல்யாணத்திற்கு தேர்ந்தெடுத்தனர். இது எதற்காகவென்றால், காதலர்கள் இரண்டு பேருமே இயற்கை விரும்பிகளாம். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லைதான். ஆனால் இயற்கை விரும்பி என்றால் எந்த அளவுக்கு தெரியுமா? இருவருமே நிர்வாண நிலையில்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் ஆள் அரவம் இல்லாத இந்த தீவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

முறைப்படி திருமணம்
இதுகுறித்து மணப்பெண் கூறியபோது, நிர்வாண நிலையில்தான் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். ஆனால் இதை என் வீட்டில் சொன்னால் ஒத்துக்க மாட்டார்கள். அதனால்தான் எங்கள் இருவீட்டு பெற்றவர்களை கூட அழைக்காமல் நாங்கள் இப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் முறைப்படி எங்கள் திருமணம் நடக்கும். அதற்கு பெற்றோர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைப்போம் என்றார்.

சம்பிரதாய உடை
நிர்வாணமாக நடைபெற்ற இந்த மணப்பெண், தலையில் ஒரு வெள்ளைத்துணி மட்டும் அணிந்திருந்தார். மணமகனோ கழுத்தில் ஒரு டை அணிந்திருந்தார். திருமணத்தில் மணமகளுக்கு தலையில் வெள்ளைத்துணி வைப்பதும், மணமகனுக்கு டை அணிவதும் சம்பிரதாயம் ஆகும். அதனால் பேருக்கு இந்த இரண்டும் அவர்கள் உடலில் இருந்தது. இவர்கள் இப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிர்வாண வாழ்த்து
இதில் கூத்து என்னவென்றால், இந்த திருமணத்திற்கு மணமக்கள் 2 பேரை மட்டும் அழைத்திருந்தார்களாம். ஆனால் அவர்களும் நிர்வாணமாகத்தான் இந்த கல்யாணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திவிட்டு போனார்களாம்!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications