டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 80 மில்லியன் டாலர்.. ஈரானில் ஷாக்கிங் விளம்பரம்.. பழிவாங்க அழைப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வந்தால், 80 மில்லியன் டாலர் ரூபாய் சன்மானம் கிடைக்கும் என்று ஈரான் அரசு சார்பாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வந்தால், 80 மில்லியன் டாலர் ரூபாய் சன்மானம் கிடைக்கும் என்று ஈரான் அரசு சார்பாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர்.அங்கு நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.

பழி வாங்கல்
இந்த தாக்குதலுக்கு பழி வாங்க வேண்டும் என்று ஈரான் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. விரைவில் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் கொலை செய்யப்பட சுலைமானியின் இறுதிச்சடங்கு நேற்று முதல் நாள் நடந்தது. இதில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்.

என்ன சொன்னது
இந்த இறுதிசடங்கு செய்தியை, ஈரான் அரசு ஊடகம் ஒளிபரப்பியது. அப்போதுதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வந்தால், 80 மில்லியன் டாலர் ரூபாய் சன்மானம் கிடைக்கும் என்று ஈரான் அரசு சார்பாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஈரானின் மக்கள் தொகை 80 மில்லியன் ஆகும்.

தலைக்கு விலை
இதனால் ஒருவர்க்கு ஒரு டாலர் என்று கொடுக்க வேண்டும். அந்த 80 மில்லியன் டாலர் பணம், டிரம்ப் தலையை கொண்டு வரும் நபர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையை நாங்கள் தாக்க முடியும். அமெரிக்க மண்ணிலேயே நாங்கள் தாக்க முடியும்.

பல இருக்கிறது
திருப்பி கொடுப்பதற்கான பலம் எங்களுக்கு இருக்கிறது. சரியான நேரத்தில் நாங்கள் திருப்பி கொடுப்போம் என்று ஈரான் கூறியுள்ளது. ஆனால் இந்த விளம்பரத்தின் உண்மைதன்மையை ஈரான் அரசு அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.
-
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்பிற்கு மரண அடி கொடுத்த நீதிமன்றம்.. H-1B விசா கட்டண உயர்வு ரத்து.. இந்தியர்களுக்கு மிக வெற்றி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்!












Click it and Unblock the Notifications