ஆகாயத்தில் செயலிழந்து சுற்றிய சாட்டிலைட்.. வலை வீசி பிடித்த கருவி.. மாஸ் வீடியோ!
ஆகாயத்தில் உள்ள மின்னனு குப்பைகளை அகற்றுவதற்காக அனுப்பப்பட்ட பிரிட்டன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பெரிய செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அகற்றி இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: ஆகாயத்தில் உள்ள குப்பைகளை மின்னனு அகற்றுவதற்காக அனுப்பப்பட்ட பிரிட்டன் கருவி வெற்றிகரமாக பெரிய செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அகற்றி இருக்கிறது.
ஆகாயத்தில் அந்த கருவி வலை வீசி குப்பைகளை நீக்குவது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த கருவிக்கு ''ரிமூவ்-டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
இது கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை இது மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட கருவி
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த கருவியை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில் சுத்தம் செய்ய உள்ளது. இதில் பெரிய தூண்டில் போன்ற வலை இருக்கும். இந்த வலை விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து வரும்.
|
வாரி எடுத்து சுத்தம் செய்யும்
நாம் நினைப்பது போலவே தான் இது குப்பைகளை வலை வீசி சுத்தம் செய்யும். அதிக அழுத்தத்தில் இந்த வலைகள் குப்பைகள் இருக்கும் திசையை நோக்கி வீசப்படும். பின் அந்த குப்பை மீது இந்த வலை பட்டதும் அதை இறுக பற்றிக்கொள்ளும். அதன்பின் அந்த குப்பைகள் ஸ்பேஸ் ஷிப்பிற்கு கொண்டு வரப்பட்டு பின் பூமிக்கு கொண்டு வரப்படும்.
|
எடுத்தது
இந்த நிலையில் இது வெற்றிகரமாக ஆகாயத்தில் பெரிய சாட்டிலைட் ஒன்றை நீக்கி இருக்கிறது. கியூப்சாட்டிலைட் எனப்படும் நாசாவின் செயலிழந்த சாட்டிலைட்டை இது வெற்றிகரமாக கைப்பற்றி இருக்கிறது. இது அங்கு பல வருடமாக செயலிழந்து சுற்றிய சாட்டிலைட் ஆகும்.
|
வீடியோ வெளியானது
வலையை மேலே வீசி இறுக பற்றிய பின் இந்த ''சாட்டிலைட் குப்பை'' ஸ்பேஸ் ஷிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. இது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மிகவும் தத்ரூபமாக உள்ளது. இதேபோல் இன்னும் நிறைய குப்பைகள் வரிசையாக அகற்றப்பட இருக்கிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications