சேட்டைக்கார குட்டி இளவரசருக்கு இன்று 2வது பிறந்நதாள்
லண்டன்: குட்டி இளவரசர் ஜார்ஜ் இன்று தனது 2வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி குடும்பத்தார் கலந்து கொள்ளும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியின் மூத்த மகனான இளவரசர் ஜார்ஜ் இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கென்சிங்டன் அரண்மனை வில்லியம் தனது மகனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
குட்டி இளவரசர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வில்லியம் விரும்பவில்லை.

பார்ட்டி
ஜார்ஜின் பிறந்தநாளையொட்டி ராஜ குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்லியம் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தான் பொழுதை கழிக்க உள்ளார்.

பைலட்
இளவரசர் வில்லியம் கடந்த வாரம் விமான ஆம்புலன்ஸ் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தனது பணியையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தாருடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.

சேட்டைக்காரன்
தனது மகன் ஜார்ஜை சின்ன குரங்கு என்று செல்லமாக தெரிவித்துள்ளார் வில்லியம். ஜார்ஜ் சரியான சேட்டைக்காரன் அவனை எப்பொழுதும் ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சார்லட்
இளவரசர் ஜார்ஜ் தனது தங்கை சார்லட்டுடன் இருக்கையில் அதை புகைப்படம் எடுத்தார் கேட். அந்த புகைப்படங்களை அண்மையில் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது.

மீடியா
வில்லியம் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீடியாக்களிடம் இருந்து தள்ளியே வைத்துள்ளார். முடிந்த வரை அவர் தனது குழந்தைகளை மீடியா முன் அழைத்து வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications