அட நாயே என்று இனிமேலும் இதை கூப்பிட முடியாது!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று கயிற்றின் மீது அதி வேகமாக நடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த நாயின் சாதனையை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சேர்க்க அதன் உரிமையாளர் முயன்று வருகிறார்.
இந்த நாய்க்கு நான்கு வயதுதான் ஆகிறது. இதன் பெயர் ஆஸ்பர்ட் ஹம்பர்டிங்க் பம்பர்நிக்கிள் என்பதாகும். இவ்வளவு பெயரை கூப்பிட முடியாது என்பதால் சுருக்கமாக ஒஸ்ஸி என்று அழைக்கின்றனர்.

கொல்லி - கெல்பியின் கலவை
கொல்லி மற்றும் கெல்பி என்ற இரு வகை நாய் இனங்களின் கலப்பினம்தான் இந்த ஒஸ்ஸி. இந்த நாய் நார்போல்க் என்ற இடத்தில் நடந்த கயிற்றின் மீது நடக்கும் போட்டியில் பங்கேற்றது.

11 அடி கயிற்றை 18 விநாடிகளில் கடந்தது
போட்டியின்போது 11.4 அடி நீளமுள்ள கயிற்றை படு வேகமாக நடந்து 18.22 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றது.

51 வயது உரிமையாளர்
ஒஸ்ஸியின்உரிமையாளர் பெயர் நிக் ஜான்சன். இவர் ஒரு கார்பென்டர். 51 வயதாகிறது. இந்த நாய்க்கு நிக் ஜான்சன் முறையாக பயிற்சி எல்லாம் தரவில்லையாம். மாறாக இன்டர்நெட்டில் வீடியோவைக் காண்பித்து தனது நாய்க்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

இது என்ன பிரமாதம்
ஒஸ்ஸிக்கு கயிற்றின் மீது நடப்பது மட்டுமல்லாமல் வேறு பல சாகசங்களும் கை வந்த கலையாம். சங்கிலியில் ஏறி விளையாடுவது, குறுகிய இடத்துக்குள் அதி வேகமாக ஓடுவது, தனது உரிமையாளரின் தோளில் ஏறி அமர்ந்து வித்தை காட்டுவது என கலக்குகிறது இந்த நாய்க்குட்டி.

கின்னஸ் சாதனைக்கு முயற்சி
ஒஸ்ஸியின் சாதனையை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சேர்க்க தற்போது நிக் முயற்சித்து வருகிறாராம்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications