For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டத்திருத்தம் மூலம் ஹைஹீல்ஸ் கட்டுப்பாடு நீக்கம்: பெண் பணியாளர்கள் நிம்மதி

By BBC News தமிழ்
|

கனடாவின் ஒரு மாகாணத்தில், பெண் ஊழியர்கள் உயரமான ஹீல்ஸ் காலணிகளை அணியவேண்டும் என்ற உடைக் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது.

ஹைஹீல்ஸ்
Getty Images
ஹைஹீல்ஸ்

பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடு பாரபட்சமானது என்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பார்த்தால் உயரமான ஹீல்ஸ் காலணிகள் ஆபத்தானவை என்ற காரணத்தால் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

உயரமான ஹீல்ஸ் அணிந்துள்ளவர்கள் தடுமாறி விழுந்தால் காயம் அடைவார்கள், பாதங்கள், கால்கள் மற்றும் உடலின் பின்புறத்தில் அடிபடும் அபாயம் உள்ளதால் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிபவர்கள் பாதுகாப்பாக இயங்க தேவையானவண்ணம்தான் பாதணிகள் வடிவமைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காலணிகளில் பாலின பாகுபாடு இருப்பதை தடுக்கும் நோக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றத்தில் மார்ச் மாதம் ப்ரொவின்சியல் க்ரீன் கட்சி கொண்டுவந்த ஒரு சட்டமசோதாவை அடுத்து உயரமான ஹீல்ஸ் காலணிகள் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு மாற்றப்பட்டுள்ளது.

பாலினம், பாலினம் வெளிப்பாடு அல்லது பாலின அடையாளத்தை கொண்டு ஊழியர்கள் மத்தியில் காலணி மற்றும் பிற கட்டுப்பாடுகளை முதலாளிகள் விதிப்பதை தடுக்க' , பிரிட்டிஷ் கொலம்பியாவின் க்ரீன் கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ வீவர் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்தார்.

ஹைஹீல்ஸ் பேஷன்

அவர் கொண்டுவந்த மசோதாவில் பணிபுரியும் இடங்கள், அதில் சிறிய மற்றும் பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் என அனைத்து பணியிடங்களும் அடங்கும்.

இந்த மசோதாவை செயல்படுத்துவத்தை விடுத்து, மாகாண அரசாங்கம் தொழிலாளர் இழப்பீடு சட்டத்தில், காலணிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதமர், கிறிஸ்டி கிளார்க், மாகாணத்தில் சில வேலையிடங்களில், பெண்கள் உயரமான ஹீல்ஸ் அணியவேண்டும் என்ற நியாயமற்ற நிலை உள்ளது.

பல பிரிட்டிஷ் கொலம்பியர்களை போல நமது அரசாங்கமும் இது தவறு என்று எண்ணுகிறது. இதன் காரணமாக இந்த பாதுகாப்பற்ற மேலும் பாகுபாடு கொண்ட ஒரு கட்டுப்பாட்டை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

இந்த புதிய திருத்தத்தின்படி, பணிபுரிபவர்களுக்கு வேலை செய்யும் நேரத்தில் பாதுகாப்பு அளிக்கும் வடிவில் காலணி அணிய அனுமதிக்கப்பட வேண்டும். எந்த முதலாளிகளும் இதற்கு மாறான தரத்தில் காலணிகளை ஊழியர்கள் அணியவேண்டும் என்று வற்புறுத்தமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பணியிட பாதுகாப்பு குழுவினால் வரையப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளில், பெண்கள் பணியிடங்கள் அல்லது கேன்ஸ் திரைப்படவிழா போன்றவற்றில் உயரமான ஹீல்ஸ் காலணிகள் அணியவேண்டும் என்பது ஒரு ஃபேஷனாக இருந்தது வருகிறது.

கனடாவில் பெண் ஊழியர்களின் உடைகட்டுப்பாடுகளை அதிகம் கொண்டதாக உணவக தொழில் துறை இருந்தது என்றும் இதில் பெண்கள் எவ்வாறு உடை அணியவேண்டும் என்ற பொது விதியில் உள்ள ஆபாசமான கருத்துக்கள் குறித்துத்தான் பல விவாதங்கள் நடந்துள்ளன என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க விரும்பலாம் :

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

மலிவு விலையில் கிடைத்த காஸ்ட்லி' அதிர்ச்சி!

35 ஆண்டுக்குப் பிறகு பள்ளி நண்பரை குத்துச்சண்டைக்கு அழைத்த பிரதமர்!

BBC Tamil
English summary
A Canadian province has scrapped the dress code which requires female employees to wear high heels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X