மலேசிய விமானம் வியட்நாம் அருகே கிடக்கிறது: இங்கிலாந்து கடல் அகழ்வாராய்ச்சியாளர்
லண்டன்: மாயமான மலேசிய விமானம் தற்போது தேடப்பட்டு வரும் இடத்தில் இருந்து 3 ஆயிரம் மைல் தொலைவில் கிடப்பதை தான் பார்த்ததாக கடல் அகழ்வாராயச்சியாளரான டிம் ஆக்கர்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கடல் அகழ்வாராய்ச்சியாளர் டிம் ஆக்கர்ஸ்(56). அவர் இரண்டாம் உலகப் போரின்போது மாயமான ஆஸ்திரேலிய நாட்டு கப்பலான ஹெச்எம்ஏஎஸ் சிட்னியின் பாகங்கள் கிடைக்குமா என்பதை கண்டறிய ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே உள்ள கடல் பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டார்.
அந்த கப்பல் மாயமான மலேசிய விமானம் மூழ்கியதாகக் கூறப்படும் இடத்தில் கிடந்தது.

கப்பல்
ஹெச்எம்ஏஎஸ்- சிட்னி கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக டிம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் உள்ள விதர்பி ஊடகங்களிடம் தெரிவித்தார். 60 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளால் கண்டுபிடிக்க முடியாததை தான் கண்டுபிடித்ததாக கூறினார்.

பாகம்
டிம் கூறிய இடத்தில் கப்பலின் பாகங்கள் கிடந்ததை அமெரிக்க கடல் விஞ்ஞானியான டேவிட் மியார்ன்ஸ் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தார்.

பாகங்கள்
தற்போது மாயமான மலேசிய விமானத்தை தேடும் இடத்தில் இருந்து 3 ஆயிரம் மைல் தொலைவில் விமானத்தின் பாகம் கிடப்பதை டிம் கண்டறிந்துள்ளார்.

நாசா புகைப்படம்
நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில் எண்ணெய் தோண்டும் துறப்பன மேடை அருகே ஒரு சிறிய பாகம் கிடக்கிறது. இது மலேசிய விமானத்தினுடையது என்று டிம் நம்புகிறார். டிம் நாசாவின் லேண்ட்சாட் 7 செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றை வைத்து விமானத்தை தேடியுள்ளார்.

வியட்நாம்
விமானம் கிளம்பிய இடத்தில் இருந்து 1000 மைல் தொலைவில் வியட்நாம் கடல் அருகே மலேசிய விமானத்தின் வால் பகுதி கிடப்பதாக அவர் நம்புகிறார்.

நிறம்
கடலில் கிடக்கும் பாகத்தில் உள்ள சிவப்பு மற்று நீள நிற கோடுகள் மலேசிய விமானத்தினோடு ஒத்துப் போகிறது என்று டிம் தெரிவித்துள்ளார்.

எரிந்தது
விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து தரை நோக்கி வந்ததை பார்த்தாக எண்ணெய் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் வியட்நாம் அரசுக்கு தகவல் கொடுத்தார். தற்போது அவர் பார்த்த இடத்தில் தான் விமானம் கிடப்பதாக டிம் கூறுகிறார்.

அமெரிக்க விமானி
அமெரிக்க விமானி ஒருவர் இணையதளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள் படங்களை வைத்து பார்க்கையில் மலேசிய விமானம் தாய்லாந்து அருகே கிடப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடல்
இந்திய பெருங்கடலில் கப்பல்கள், ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஆகியவை தீவிரவமாக 6 வாரங்களுக்கும் மேலாக தேடியும் இதுவரை மலேசிய விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்க விமானியும், இங்கிலாந்து கடல் அகழ்வாராய்ச்சியாளரும் விமானம் வேறு இடத்தில் கிடப்பதாக கூறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications