செக்ஸ் அடிமையாக விற்கப்பட்ட யு.கே. பெண் 22 மணிநேரத்தில் 110 பேரால் பலாத்காரம்
ஏதென்ஸ்: கிரீஸில் செக்ஸ் அடிமையாக விற்கப்பட்ட இங்கிலாந்து பெண் 22 மணிநேரத்தில் 110 பேரால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் மெகன் ஸ்டீபன்ஸ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு 14 வயது இருக்கையில் தனது தாயுடன் விடுமுறையை கழிக்க கிரீஸுக்கு சென்றார். அங்கு உள்ள பார் ஒன்றில் அவருக்கு அல்பேனியாவைச் சேர்ந்த ஜாக் என்ற 22 வயது வாலிபர் பழக்கமானார். ஜாக்கை ஸ்டீபன்ஸின் தாய்க்கு பிடிக்கவில்லை என்றாலும் அவருடன் பழக அனுமதித்தார்.

விடுமுறை முடிந்த பிறகு ஸ்டீபன்ஸ் தனது தாயுடன் செல்லாமல் ஜாக்குடன் தங்கிவிட்டார். அப்போது ஜாக், தனது தாய்க்கு தொண்டையில் புற்றுநோய் உள்ளது என்றும், அவருக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தாயின் சிகிச்சைக்காக ஸ்டீபன்ஸை டாப்லெஸ் பாரில் நடனமாட வைத்துள்ளார்.
பின்னர் ஜாக் ஸ்டீபன்ஸை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். தினமும் 50 ஆண்கள் ஸ்டீபன்ஸை பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு சமயம் 22 மணிநேரத்தில் 110 ஆண்கள் ஸ்டீபன்ஸை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆறு ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஸ்டீபன்ஸ் தனது 20வது வயதில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் கடந்த 2009ம் ஆண்டு அவருடைய பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்டீபன்ஸ் தனது காதலரின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார். ஜாக் சமூக வலைதளம் மூலம் தான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தற்போதும் முயற்சி செய்வதாக ஸ்டீபன்ஸ் தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications