மறுபடியும் பாடலுக்கு வாயை மட்டும் அசைத்து எக்குதப்பாய் மாட்டிக்கொண்ட “பிரிட்னி ஸ்பியர்ஸ்”!
லாஸ் வேகாஸ்: பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியின்போது இன்னொருவரின் பாடலுக்கு வாயசைத்து பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பெர்ப்யூம் என்ற பாடலைப் பாடினார் பிரிட்னி.
ஆனால் அப்பாடலை சியா என்ற பாடகிதான் உண்மையில் பாடியதாகவும், அந்தப் பாடலுக்கு பிரிட்னி வாயசைத்ததாகவும் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சியாவின் பாடல்:
சியா, சான்டெலியர் என்ற பாடல் மூலம் பெயர் பெற்றவர் ஆவார். மேலும் பெர்ப்யூம் பாடலை எழுதியவர்களில் சியாவும் ஒருவர். இந்தப் பாடலை சியாவே கூட ஏற்கனவே பாடி அது யூடியூபிலும் பிரபலமாகியுள்ளது.
பிரிட்னியின் வாயசைவு:
லாஸ் வேகாஸ் பிரிட்னி நிகழ்ச்சி குறித்துக் கருத்துக் கூறிய ஒரு ரசிகர், நீங்கள் வீடியோவை நன்கு உற்றுப் பாருங்கள், பாடலுக்கும், பிரிட்னியின் வாயசைவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
அவர் பாடவில்லை:
நிச்சயம் அந்தப் பாடலை பிரிட்னி பாடவில்லை. மாறாக சியாவின் குரலுக்குத்தான் பிரிட்னி வாயசைத்துள்ளார்.
பெரும் தர்மசங்கடம்:
இது தற்செயலாக நடந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இது பிரிட்னிக்குத் தர்மசங்கடமான சம்பவமாக அமையும் என்றார் அவர்.
பின்னடைவான நிகழ்ச்சி:
அதேசமயம், லாஸ் வேகாஸ் நிகழ்ச்சி பல விதங்களிலும் சரியில்லை என்று பாடலாசிரியர் மைக்கேல் உட் கூறியுள்ளார். இதுகுறித்து உட் கூறுகையில், இந்தப் பாடலும், நிகழ்ச்சியும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. பிரிட்னியின் நடனம் சரியில்லை. அவர் வாயசைத்தது இன்னொரு பின்னடைவு என்றார் அவர்.
ஒத்துக் கொண்ட மேனேஜர்:
இதுகுறித்து பிரிட்னியின் மேனேஜர் ஆடம் லெபர் கூறுகையில், முதலில் பிரிட்னி வாயசைத்ததாக கூறப்படுவதை மறுத்தார். ஆனால் பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில், எப்போதும் எல்லோராலும் பாடிக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில் இப்படி நடக்கலாம் என்றார் அவர்.
சிரமமானது என்பது உண்மை:
மேலும் அவர் கூறுகையில், "அதேசமயம், அவரது பாடல்களை பெரும்பாலும் அவர்தான் எப்போதும் பாடுவார். பாட முடியும் என்று தோன்றும்போது அவரே பாடுவார். 90 நிமிட நேரத்திற்கு டான்ஸ் ஆடியபடி பாடுவது சிரமமானது. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications