பிரிட்னியை புதுப் பொலிவுடன் ஃபிரஷ் ஆக்கிய தியானம்!
லண்டன்: பாப் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸ், தான் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் புதுப் பொலிவு பெற்றுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
33 வயதான பிரிட்னி தொடர்ந்து தியானம் செய்து வருகிறாராம். தினசரி 20 நிமிடம் தியானம் செய்கிறாராம்.
இப்படி தொடர்ந்து தியானம் செய்வதால் அவர் முன்பை விட பதட்டம் குறைந்து நிதானமாக இருக்க முடிவதாக அவரது நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

எப்பப் பார்த்தாலும் பதட்டம்
பிரிட்னி முன்பு எப்போது பார்த்தாலும் பதட்டமாக, டென்ஷனமாக, கோபம் கொண்டவராக இருப்பார். ஆனால் தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் அவர் மாறியுள்ளார்.

கோபம் போயே போச்
அவரிடம் இப்போது கோபம் குறைந்து விட்டது. நிதானம் அதிகரித்துள்ளது. பதட்டம் போய் விட்டது. மனசும், உடலும் புதிய பொலிவுடன் திகழ்கிறது.

மகிழ்ச்சியான முகம்
அவரது மனதிலும், முகத்திலும் மகிழ்ச்சி பெருகியுள்ளது. மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை பிரிட்னியிடம் தற்போது காண முடிகிறது.

சோகம் கிடையாது
முன்பு எப்போது பார்த்தாலும் சோகமாக இருப்பார். டல் ஆகி விடுவார். இப்போது அது காணாமல் போய் விட்டது. பாசிட்டிவாக எதையும் சிந்திக்கிறாராம்.

பாய் பிரண்டை பிரிந்த நிலையில்
தான் எட்டு மாதமாக காதலித்த சார்லி எபர்சோலை இப்போது பிரிந்து விட்டார் பிரிட்னி. இருப்பினும் தியானம் காரணமாக அவர் முன்பை விட மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.

எடையும் குறைந்தது
முன்பு அதிக எடை போட்டு விட்டிருந்தார் பிரிட்னி. தற்போது எடையும் கணிசமாக குறைந்துள்ளதாம். தினசரி அவர் தியானத்தை தவறாமல் செய்து வருகிறாராம். சைவ சாப்பாட்டையும் அதிகம் விரும்புகிறாராம்.
நல்லது நடந்தால் நல்லதுதானே...!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications