பனியோடு உறவாடி.. சறுக்கி சறுக்கி விளையாடி.. "ஸ்விங் ஸ்விங்" சிகாகோ.. வீடியோ!
சிகாகோ: ஆஹா.. என்று கூறும் அளவுக்கு பனி கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவில்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நவம்பர் தொடங்கி லேசான குளிர் பரவி குளிர்காலம் தொடங்குகிறது. அடிக்கடி பனி மழை கூட பொழிகிறது.

அப்படியான அந்த குளிர் காலத்தில் கோடை காலம் போல சட்டென்று வெளியே கிளம்பி அங்கு இருப்பவர்களால் வெளியில் சுற்ற முடிவதில்லை. அதனாலேயே அவர்கள் பனிக்காலத்தை சுகமாக கழிக்க உள்ளரங்குகளிலே நிறைய பொழுதுபோக்குகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கு தான் இந்த குளிர்காலத்தில் படையெடுக்கிறார்கள்.
அப்படிப்பட்டவை தான் சங்கீத சபாக்கள், இசை மேடைகள், திரைப்பட அரங்குகள், அருங்காட்சியகம். இப்படி முக்கால்வாசி நேரத்தை உள்ளரங்கிலே கழிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி அங்கு குளிர்காலத்தில் ரொம்ப பிரபலமான பொழுதுபோக்கு பனிச்சறுக்கு விளையாட்டு தான்.
குளிரிலும் கூட பெரிய ஜாக்கெட் போட்டுகொண்டு, உயரமான காலணிகளை போட்டுகொண்டு பனிச்சறுக்குக்கு பிரத்தியேகமாக உபயோகிக்கும் ஸ்கேட் போர்டு மாட்டிக்கொண்டு "ஸ்விங் ஸ்விங்" என்று வெகு அழகாக லாவகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜாலியாக சறுக்கிறார்கள்.
யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வாங்க இல்லையா அது போல தான் ஸ்விங் ஸ்விங் என்று சூப்பரா சறுக்கி கொண்டிருப்பவர்கள் சட் சட்னு விழுவதும் நடக்கும். நாம பனிச்சறுக்கில் விளையாடறோமோ இல்லையோ இவங்க கொண்டாட்டத்தை பார்த்தாலே குஷி ஆகிவிடுவோம். வாங்க ஜாலியா ஒரு பனிச்சறுக்கு அனுபவம் பெற விடியோவை பாருங்க.
வீடியோ படமாக்கப்பட்ட இடம்: பார்க்வே பேங்க் பார்க், ரோஸெமென்ட், சிகாகோ.
- Inkpena சஹாயா
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications