அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பவுன்ஸ் ஆகி கொள்ளைக்கார சிறுவன் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் துப்பாக்கி குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். கொள்ளை கும்பல் தெருவில் சென்ற ஒருவரை சுட்டதில் குண்டு அவரது முகத்தை துளைத்து கொள்ளைக்காரன் ஒருவனின் மீது பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் அலிமனி போல்வார்டில் ஒருவர் கடந்த மாதம் 14ம் தேதி அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கூட்டம் ஒன்று அவரை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளது. அவர் பயந்து போய் நின்றபோது சிறுவன் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அவரது முகத்தில் சுட்டான்.
இதில் குண்டு அவரது முகத்தை துளைத்துக் கொண்டு அவர் அருகில் நின்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த க்லிப்டன் சாட்மேன் என்ற 16 வயது சிறுவன் மீது பாய்ந்தது. இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதை பார்த்து மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு வந்து குண்டடிபட்டு கிடந்த நபர் மற்றும் இறந்து கிடந்த சிறுவனை பார்த்தனர். குண்டடிபட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த நபரை சுட்ட சிறுவனை போலீசார் அடையாளம் கண்டபோதிலும் அவன் மைனர் என்பதால் அவனின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட மறுத்துவிட்டனர். அவன் மீது கொள்ளை முயற்சி மற்றும் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications