திருடப் போன இடத்தில் ஹீரோவாக முயற்சித்த திருடன்.. கடைசில ஊரே கை கொட்டி சிரிக்கற மாதிரி ஆகிடுச்சே!
திருட முயற்சித்து காலை உடைத்துக் கொண்ட திருடனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
புரூசெல்ஸ்: நகைக்கடையில் திருடப் போன இடத்தில் ஓவராக சீன் போட முயற்சித்து காலோடு மூக்கையும் உடைத்துக் கொண்ட திருடன் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐரோப்பாவின் கிரியன் தீபகற்பம் பகுதியில் உள்ளது சிம்ஃபொரோபோல் நகர். சமீபத்தில் இங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு திருடன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் திருடச் சென்றுள்ளான். அங்கு கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தரையில் படுக்கச் சொல்கிறான்.

பின்னர் சினிமாவில் வருவது போல் கதவு ஒன்றை உடைத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் செல்ல முயற்சிக்கிறான். ஆனால் சினிமாவில் வருவது போல் ஒரு உதையில் அந்த கதவை உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரத்துடன் இரண்டாவது முறையும் கதவை எட்டி உதைக்கிறான். அப்போதும் அந்த கதவு அசைந்து கொடுக்கவில்லை.
இதனால் கடுப்பான அந்த திருடன் மூன்றாவது முறை சற்று ஓங்கி அந்தக் கதவை மிதிக்கிறான். ஆனால், பாவம் கதவு திறப்பதற்கு பதில் இம்முறை அவனது கால் உடைந்து விட்டது. இப்படியே போனால் போலீசில் மாட்டி விடுவோம் என பயந்த அந்தத் திருடன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என இடத்தைக் காலி செய்து விட்டு தப்பி விடுகிறான்.
இந்த காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருடப் போன இடத்தில் ஹீரோ போல நடந்து கொள்ள முயற்சித்து, காலை உடைத்துக் கொண்ட திருடனின் வீடியோ தான் இப்போது சமூகவலைதளத்தில் வைரல். உடைந்தது திருடனின் கால் மட்டுமல்ல, அவனது மூக்கும் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications