உலகெங்கும் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்ட நாடுகள் எவை, எவை?
சென்னை: முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிய தடை விதித்துள்ள நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் சேர்ந்துள்ளது.
உலகை தீவிரவாதம் அச்சுறுத்தி வரும் நிலையில் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிந்து தீவிரவாதிகள் சில இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சில நாடுகளில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தும் புர்காவுக்கு தடை விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மக்கள் வசிக்கும் டிசினோ மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்
2011ம் ஆண்டு பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிந்து வெளியே வர பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பெல்ஜியம்
பிரான்ஸை அடுத்து பாதுகாப்பு காரணங்களை காட்டி புர்காவுக்கு தடை விதித்து 2011ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது பெல்ஜியம்.

நெதர்லாந்து
முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய 2007ம் ஆண்டே நெதர்லாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின்
பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணிய ஸ்பெயினின் பார்சிலோனா உள்பட 12க்கும் மேற்பட்ட நகரங்களில் 2010ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இத்தாலி
பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவது சட்டவிரோதமானது என்ற சட்டம் இத்தாலியில் 1970களில் இருந்து நடைமுறையில் உள்ளது.

ரஷ்யா
2013ம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது.

ஜெர்மனி
ஜெர்மனியில் பள்ளி ஆசிரியைகள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கலாம் என்று 2003ம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 16 மாநில அரசுகள் முகத்தை மறைக்கும் புர்காவுக்கு தடை விதித்தன. மேலும் அரசு ஊழியைகள் ஸ்கார்ப், முகத்தை மறைக்கும் துணி அணிய 2011ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications