பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 56 பேர் பலி - 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கராச்சி: பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுக்கூர் மாவட்டத்தில், கராச்சி நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமாகையால், பேருந்தின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்து முற்றிலுமாக சிதைந்து போனது.
இந்த விபத்தில் 21 பெண்கள், 18 சிறுவர்கள் உள்ளிட்ட 56 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 20 பேர் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications