மெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி

Subscribe to Oneindia Tamil

மெதீனா: சவூதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் 35 பேர் பலியானார்கள்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மெதீனாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

bus rams into heavy vehicle and 35 foreigners died in saudi accident

மெதீனா மாகாணத்தில் உள்ள அல் அகால் மையம் பகுதியில் கனரக வாகனம் மீது பயணிகளுடன் சென்ற பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள்.

பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள். காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த கோர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்துத் தெரியவில்லை. விபத்தில் சிக்கிய பேருந்து தனியார் பேருந்தாகும். விபத்தில் சிக்கியதும் பஸ் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+