தான் 'கே' இல்லை என்பதை நிரூபிக்க ஒருவரின் இதயத்தை அறுத்து நறுக்கி சாப்பிட்ட தொழில் அதிபர்
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் தொழில் அதிபர் ஒருவர் தான் கே(gay) அதாவது ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்பதை நிரூபிக்க ஒருவரின் இதயத்தை சாப்பிட்டு கொலை குற்றவாளி ஆகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனைச் சேர்ந்தவர் ஆன்ட்ரூ சிம்போசா(35). தொழில் அதிபர். அவரை அதே பகுதியைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டில் வைத்து புயிசெலோ மனோனா(62) என்பவர் அவமானப்படுத்தியுள்ளார். அதாவது ஆன்ட்ரூவை ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் ஆன்ட்ரூ மனோனாவை கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆன்ட்ரூவை கைது செய்தனர்.
ஆன்ட்ரூ தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் இல்லை என்பதை மனோனாவுக்கு நிரூபிக்க அவரின் மார்பில் ஏறி உட்கார்ந்து கத்தியால் குத்தி அவரது இதயத்தை வெளியே எடுத்து அதை நறுக்கி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவர் மனோனாவின் கழுத்தையும் கடித்து சதையை சாப்பிட்டுள்ளார். போலீசார் சம்வ இடத்திற்கு வந்தபோது அவர் மனோனாவின் கழுத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
மனோனாவின் மார்பில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. மனோனாவின் இதயத்தை சாப்பிட்ட பிறகு தான் அவரை கொலை செய்துவிட்டது ஆன்ட்ரூவுக்கு புரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications
