Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கென்ற பிகினியில் கலக்கிய பெண் நீதிபதி... டிவிட்டரில் படம் போட்டதால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சிசினாவ், மால்டோவா: உடலை இறுக்கிப் பிடிக்கும் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமான தனது புகைப்படத்தை டிவிட்டரில் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மால்டோவா நாட்டைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதி ஒருவர். அவரது இந்த கவர்ச்சிக் கோலத்திற்காக அங்கு அவர் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

அவரது பெயர் மரியா கோஸ்மா. மால்டோவா நாட்டுத் தலைநகர் சிசினாவைச் சேர்ந்தவர். இவர் நீதிபதியாக இருக்கிறார்.

Busted! Young female judge blasted for posting skimpy bikini picture on Twitter

இவர பிகினி உடையில் காட்சி தரும் கவர்ச்சிப் படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரே இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

கிரிமினல் கோர்ட் நீதிபதி...

இவரது தாத்தா மால்டோவா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். மரியாவின் கவர்ச்சி போஸ் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் இவர் தலைநகரின் முக்கியமான கிரிமினல் கோர்ட் ஒன்றின் நீதிபதியாக மரியா நியமிக்கப்பட்டிருந்தார்.

கண்டனங்கள்...

27 வயதாகும் மரியா, இப்படி கவர்ச்சிகரமான போஸைக் கொடுத்துள்ளது அந்த நாட்டில் கண்டனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

மதிப்பிற்குரிய பதவி...

இதுகுறித்து நீதிபதிகள் சங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நீதிபதி பதவி என்பது மதிப்பிற்குரிய ஒன்றாகும். அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். கிரமினல்களின் வாயில் அவலை கொடுப்பது போல செயல்படக் கூடாது.

அதிர்ச்சி...

மிகப் பெரிய நீதித்துறை குடும்பத்திலிருந்த வந்துள்ள மரியா இப்படிச் செய்தது அதிர்ச்சி தருகிறது. நாட்டில் உள்ள மற்ற பெண் நீதிபதிகள் மரியாவை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என்றார்.

நியாயம்...

அதேசமயம், பெண்கள் அமைப்புகள் பல மரியாவின் செயலை நியாயப்படுத்தியுள்ளது. அதேசமயம், நீதிபதியாக இருப்பவர் இப்படிச் செய்தது சரியல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சை...

சமீபத்தில் மால்டோவாவில் கார்களைக் கழுவும் பணியில் கவர்ச்சிகரமான நீச்சல் உடைப் பெண்களை ஈடுபடுத்தி ஒரு பிரசாரம் நடத்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் மரியாவின் பிகினி உடை படம் வெளியானதால் சர்ச்சை பெரிதாகி விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+