காட்டோட ராஜாவுக்கு இப்டி ஒரு நிலைமையா.. எருமையைவிட சிங்கத்தோட விலை குறைவா இருக்கே!
பாகிஸ்தானில் எருமையைவிட குறைவான விலைக்கு சிங்கங்கள் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எருமை மாட்டைவிட குறைவான விலைக்கு சிங்கங்கள் விற்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மோசமான பொருளாதார நிலை நிலவி வருகிறது. எனவே, அங்கு உணவுப் பொருட்கள், பானங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதனால் பலர் தங்களிடம் உள்ள கால்நடைகளை பராமரிக்க இயலாமல் விற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் சிங்கத்தின் விலை, எருமை மாட்டின் விலையை விட குறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைவான விலை
லாகூர் சஃபாரி மிருகக்காட்சியில் மொத்தம் 40 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் சில ஆப்பிரிக்க சிங்கங்களை விற்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, தங்களிடம் உள்ள சிங்கம் ஒன்றின் விலை 1,50,000 பாகிஸ்தான் ரூபாய் என சம்பந்தப்பட்ட மிருகக்காட்சி சாலை விலை நிர்ணயித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டைப் பொறுத்தவரை இது மிகக் குறைவான விலையாகக் கருதப்படுகிறது.

எருமையின் விலை அதிகம்
ஏனென்றால், பாகிஸ்தானில் ஆன்லைன் சந்தையில் ஒரு எருமை மாட்டின் விலை, ரூ.3,50,000 முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளது. ஆனால் சிங்கத்தின் விலையோ ரூ. 1,50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில் எருமை மாட்டின் விலையை விட சிங்கத்தின் விலை பல மடங்கு குறைவு ஆகும்.

3 பெண் சிங்கங்கள்
இந்த சிங்கங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வர உள்ளதாகத் தெரிகிறது. மொத்தம் 12 சிங்கங்களை விற்க, லாகூர் சஃபாரி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் முதலில் மூன்று பெண் சிங்கங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பராமரிக்க இயலவில்லை
தனியார் அல்லது கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்காக இவ்வளவு குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 142 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில், சிங்கங்களைப் பராமரிக்க அதிக செலவு ஆவதால், அவற்றை விற்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இப்படி சிங்கங்களை விற்பது அந்த மிருகக்காட்சி சாலையில் ஒன்றும் புதிய விசயமில்லை.

ஆண்டுதோறும் விற்பனை
கடந்தாண்டும் இதேபோல், 14 சிங்கங்களை அந்த மிருகக்காட்சி சாலை நிர்வாகம் விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை எருமை மாடுகளைவிட குறைவான விலைக்கு, சிங்கங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. குறைந்த விலைக்கு விற்றாலாவது யாராவது வாங்கிச் செல்வார்களா எனப் பார்ப்போம் என இப்படி விலை நிர்ணயித்துள்ளது போலும் அந்த மிருகக்காட்சி சாலை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications