'வே டு கோ' கெய்ட்லின்: பெண்ணாக மாறிய கிம்மின் தந்தையை பாராட்டும் பிரபலங்கள்
நியூயார்க்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம்மின் தந்தை ப்ரூஸ் ஜென்னர் பெண்ணாக மாறியதற்கு ட்விட்டரில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனின் தந்தை ப்ரூஸ் ஜென்னர். அவருக்கு பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என்று நினைக்காமல் துணிச்சலாக பெண்ணாக மாறி தனது பெயரை கெய்ட்லின் ஜென்னர் என மாற்றியுள்ளார்.
கெய்ட்லின் ஜென்னருக்கு ட்விட்டரில் பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
|
லவார்ன் காக்ஸ்
ப்ரூஸ் கெய்ட்லினாக மாறியுள்ளதற்கு திருநங்கையான நடிகை லவார்ன் காக்ஸ்(30) வாழ்த்து தெரிவித்துள்ளார். கெய்ட்லின் அழகாக உள்ளார். ஆனால் அவரின் இதயம் மிகவும் அழகானது என்று நான் நினைக்கிறேன். அவரின் துணிச்சலான முடிவு அழகாகத் தெரிகிறது என்று காக்ஸ் தெரிவித்துள்ளார். வேனிட்டிஃபேர் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் கெய்ட்லினின் புகைப்படம் வந்துள்ளதை நினைத்து காக்ஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
|
டெமி
கெய்ட்லின் ஜென்னரின் மார்பகங்கள் என்னுடையதை விட நன்றாக உள்ளது. அவரை நினைத்து பெருமையாக உள்ளது என்று அமெரிக்க பாடகியும், நடிகையுமான டெமி லொவாட்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
எலன்
நாம் அனைவரும் கெய்ட்லின் ஜென்னர் போன்று துணிச்சலாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என நகைச்சுவை நடிகை எலன் டிஜெனரஸ் ட்வீட் செய்துள்ளார்.
|
லேடி காகா
உள்ளுக்குள் இருந்த அழகு தற்போது வெளியே தெரிகிறது. உங்களையும், உங்களின் குடும்பத்தாரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று பாடகி லேடி காகா தெரிவித்துள்ளார்.
|
வில் ஃபெர்ரல்
மன்னித்து விடுங்கள் கிறிஸ், ஆனால் கெய்ட்லின் ஜென்னர் உங்களை தோற்கடித்து விட்டார் போன்று என அமெரிக்க நடிகர் வில் ஃபெர்ரல் கிம்மின் தாயை கிண்டல் செய்துள்ளார்.
|
மரியா ஷ்ரிவர்
பெண்கள் முன்னேற்றம் கெய்ட்லின் ஜென்னர் மூலம் புதிய துணிச்சலான குரலை பெற்றுள்ளது என்று ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கரின் மனைவி மரியா ஷ்ரிவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications