ஒரே குழப்பமா இருக்கே.. "புதுப் பெண்" கெய்த்லீன் ஜென்னருக்கு வந்த தர்மசங்கடம்
லாஸ் ஏஞ்செலஸ்: பெண்ணாக அவதாரம் எடுத்துள்ள கிம் கர்தஷியானின் தத்துத் தந்தை கெய்த்லீன் ஜென்னருக்குப் போகும் இடமெல்லாம் தர்மசங்கடமும், குழப்பமும் கூடி நின்று வரவேற்பு தருகிறதாம்.
முழுமையான பெண்ணாக மாறி விட்டார் ப்ரூஸ் ஜென்னர். இவர் கிம் கர்தஷியான் சகோதரிகளின் தாயாரின் 2வது கணவர் ஆவார். தற்போது தனது பெயரையும் கெய்த்லீன் ஜென்னர் என மாற்றிக் கொண்டுள்ளார். கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் கூட வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த 15 வருடமாக உறுப்பினராக இருக்கும் தவுசன்ட் லேக்ஸ், ஷெர்வுட் கன்ட்ரி கிளப்பில் சில சிக்கல்களைச் சந்தித்து வருகிறாராம் கெய்த்லீன் ஜென்னர்.

விஐபி கிளப்
மிகவும் பிரபலமான விஐபி கோல்ப் கிளப் இது. இங்கு உறுப்பினராவதே பெரிய கஷ்டம். மேலும் படு காஸ்ட்லியான கிளப்பும் கூட. இங்கு கடந்த 15 வருடமாக உறுப்பினராக இருக்கிறார் கெய்த்லீன்.

ஆண்களுடன் ஆடிய ப்ரூஸ்
இங்கு தினசரி கோல்ப் ஆடுவது அவரது வழக்கம். இத்தனை காலமாக அவர் பெரும்பாலும் ஆண்களுடன்தான் ஆடி வந்தார். தற்போது பெண்ணாகி விட்டதால் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

பெண்ணாக மாறியதால் சிக்கல்
சில இடங்களில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு இந்த கிளப்பில். எனவே கெய்த்லீனால் முன்பு போல அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

லாக்கர் ரூமுக்கு நடக்கணும்
மேலும் இங்குள்ள லாக்கர் ரூமும் ஆண்களுக்கு மட்டுமேயானது. எனவே அதை கெய்த்லீனால் பயன்படுத்த முடியாத நிலை. பெண்களுக்கான லாக்கர் ரூம் நீண்ட தொலைவில் உள்ளதால் போய் வருவதில் சிக்கல் ஏற்படுகிறதாம்.

அனுபவிக்க முடியலையே
இதுவரை ப்ரூஸ் ஜென்னராக அவர் அனுபவித்த வந்த பல விஷயங்களை இனிமேல் அனுபவிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. காரணம், கெய்த்லீனாக மாறி விட்டதால்.

கோரிக்கை வைக்கலாம்
ஆனால் தான் முன்பு போல இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு கெய்த்லீன் கோரிக்கை வைத்தால் அதைப் பரிசீலிக்க கிளப் நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவாக இருந்தாலுமே கூட பெண்ணாக இருந்தால் சிக்கல்தானா... அட ஆண்டவா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications