உதவிக்கு ஏங்கும் மக்கள்.. இரக்கம் காட்டாத காட்டுத் தீ.. கலிபோர்னியா வாசிகளின் கதறல்
கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்களின் காரணமாக அங்கு உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்களின் காரணமாக அங்கு உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் போதிய அளவில் உதவிகள் வழங்கப்படவில்லை.
இந்த வருடத்தில் மே மாதத்தில் இருந்தே கலிபோர்னியா பகுதி பெரிய அளவில் காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்கள் அந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது.
தற்போது அந்த பகுதி மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர முயற்சி எடுத்தாலும் இன்னும் பலர் உதவி இன்றி தவித்து வருகின்றனர். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் உதவிக் குரல் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
|
கண்ணெதிரே
கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் தாமஸ் காட்டுத் தீ, சூசன் என்ற பெண்ணின் வீட்டை சூழ்ந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் கண்ணுக்கு எதிராகவே அவர் வசித்த வீட்டின் நிலத்தை காட்டுத் தீ பொசுக்கி இருக்கிறது. சரியான நேரத்தில் வந்த கலிபோர்னியா தீயணைப்பு படை கஷ்டப்பட்டு தீயை வெற்றிகரமாக அணைத்து இருக்கிறது. அந்த பெண் கண்ணீருடன் தீ அணைப்பு படை செல்வதை பார்க்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
|
இதுவே அதிகம்
இந்த நிலையில் தற்போது அங்கு உருவாகி இருக்கும் 6 காட்டுத் தீ குறித்து இவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் "கலிபோர்னியாவில் தற்போது காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து வருடம் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே பாதி பகுதிகள் அழிந்துவிட்டது. இந்த நிலையில் இந்த தீ கால நிலையிலேயே மாற்றத்தை உருவாக்கும்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
|
வந்துவிட்டது
தன் ஊருக்குள் வந்து இருக்கும் காட்டுத் தீ குறித்து இந்த பெண் எழுதி இருக்கிறார். அதில் "என் ஊருக்குள் காட்டுத் தீ வந்துவிட்டது. எனக்கு அழுகையாக வருகிறது. என் உறவுக்காரர் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். அதில் மந்தைக்குள் குதிரைகளை மாட்டிக் கொண்டு தவிக்கிறது. எனக்கு அதை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடத்தில் ஏற்கனவே தீ வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
கொத்தாக இறந்த குதிரைகள்
இந்த நிலையில் இந்த தீயால் மனிதர்கள் மட்டும் இல்லாமல் நிறைய விலங்குகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று குதிரைகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீ பரவியது. இதன் காரணமாக 100க்கும் அதிகமான பந்தய குதிரைகளும், வளர்ப்பு குதிரைகளும் இறந்து போய் இருக்கின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் விலங்குகளை பாதுகாக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications