இரட்டையர்கள்தான்... ஆனால், பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்... குழப்புதா.. நியூசைப் படிங்க புரியும்!
கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், பிறந்த ஆண்டு வெவ்வேறாக ஆகியுள்ளது. காரணம் அவர்கள் பிறந்தது புத்தாண்டு நள்ளிரவில்.
இரட்டைக் குழந்தைகள் என்றாலே ஒரே பிரசவத்தில் ஒன்றாகப் பிறந்தவர்கள் என்பது தான் பொருள். பெரும்பாலும் இவர்கள் ஒத்த உருவ அமைப்பு, குணநலன்கள் என்று அசத்துவார்கள். இதனாலேயே அவர்களைப் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.
ஆனால், அமெரிக்காவில் பிறந்த ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் போதே வெவ்வேறான ஆண்டுகளில் பிறந்து வித்தியாசம் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் மரிபெல். நிறைமாத கர்ப்பிணியான அவர், கடந்த வியாழன் அன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புத்தாண்டு பிறக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் முதலில் மரிபெல்லுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கும் இடைப்பட்ட நிமிடங்களில் புத்தாண்டு பிறந்து விட்டது.
இதனால், பெண் குழந்தையின் பிறந்த ஆண்டு 2015 ஆகவும், ஆண் குழந்தைக்கு 2016 ஆகவும் மாறிப் போனது. இதனால் இரட்டையர்களான இருவரின் பிறந்த ஆண்டும் ஒரு வருட வித்தியாசத்தில் ஆகி விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications