என்னடா இது.. ஒயின் இப்படி புகை வாடை அடிக்குது.. கலிபோர்னியாவில் ஒரு களேபரம்!
கலிபோர்னியா: அமெரிக்கா என்றாலே கலிபோர்னியாதான்.. கலிபோர்னியா என்றாலே சூப்பர் ஒயின்தான் முதல்ல நமக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதெல்லாம் "பாஸ்ட் டென்ஸ்" ஆக மாறி விட்டது. காரணம் மாறிப் போன ஒயின் "டேஸ்ட்". இப்போது கலிபோர்னியா ஒயினைக் குடித்தால் குபுக்கென்று வாந்தி வருதாம்.. அப்படி டேஸ்ட் மாறி விட்டது.
கலிபோர்னியா ஒயினுக்கென்று ஒரு தனி டேஸ்ட் உண்டாம். காரணம் அந்த மாகாணத்தில் விளையும் திராட்சையின் தரமும், சுவையும் அப்படி. ஆனால் சமீபத்தில் இந்த டேஸ்ட்டெல்லாம்.. போயே போய் விட்டது.
ஆமாங்க, சமீபத்தில் நடந்ததே ஒரு பெரிய காட்டு தீ. அதில் சிக்கி திராட்சைத் தோட்டங்கள் பலவும் நாசமாகி விட்டன. சிக்கித் தப்பிய திராட்சைத் தோட்டங்களில் விளைந்த திராட்சைகளில் டேஸ்ட் மாறிக் காணப்படுகிறதாம்.

ஒரே புகை வாடை
புகை வாடையுடன் கூடிய திராட்சையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒயின் குடிக்க முடியாத அளவுக்கு குமட்டலாக இருக்கிறதாம். இதனால் ஒயின் பிரியர்கள் செம கடுப்பாகியுள்ளனர். ஆமா ஏன் இப்படி நிலைமை என்று கேட்டால்.. உட்கார வைத்து விலாவாரியாக விளக்குகிறார்கள் கலிபோர்னியா திராட்சை விவசாயிகள்.. அதாவது கலிபோர்னியா காட்டுத் தீ காரணமாக எழுந்த மிகப் பெரிய புகை மண்டலம் திராட்சைகளை பாதித்துள்ளது.

புகையால் ஏற்பட்ட பாதிப்பு
திராட்சைப் பழங்கள் இந்த புகையை உள்ளிழுத்துக் கொண்டதால் அதன் டேஸ்ட் மாறிப் போய் விட்டது. அதாவது இனிப்புச் சுவையானது ஒரு மாதிரியான கசப்புச் சுவையாக மாறியுள்ளது. இப்படி புகை மண்டிப் போய்க் கிடந்த திராட்சைப் பழங்களைக் கொண்ட ஒயினும் ரசித்து குடிக்க முடியாத அளவுக்கு டேஸ்ட் மாறி மோசமானதாக மாறி விட்டது. காட்டுத் தீ புகையிலிருந்து வெளியான "பெனால்" வேதிப் பொருள்தான் திராட்சைகளின் டேஸ்ட் மாற முக்கியக் காரணமாம்.

பெனாலால் பணால் ஆன டேஸ்ட்
இந்த பெனாலானது, திராட்சைப் பழத்திற்குள் இருக்கும் இனிப்புச் சுவையை மாற்றி விட்டது. இனிப்புக்குப் பதில் கிளைகோசைட் வேதிப் பொருளை அது உருவாக்கி விட்டது. இந்த வேதி மாற்றத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையும் இருப்பதால் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டதே யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. தயாரிக்கப்பட்ட ஒயின் சுவையாக இல்லை என்பதை அறிந்த பிறகுதான் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டு, புகைதான் இதற்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

பெரும் நஷ்டம்
இந்த சுவை மாற்றத்தால் மிகப் பெரிய இழப்பை ஒயின் தயாரிப்பாளர்கள் சந்தித்துள்ளனராம். இதுகுறித்து ஒயின் குறித்த ஆய்வு நிபுணர் பேராசிரியர் புராக் காஸ் என்பவர் கூறுகையில், சீரமைக்க முடியாத அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்துள்ளனர் ஒயின் தயாரிப்பாளர்கள். சுதாரித்து பிரச்சினையை சரி செய்வதற்கான நேரத்தைக் கடந்து விட்டனர். இது நிச்சயம் நீண்ட கால இழப்புக்கு வழி வகுக்கும் என்றார்.

ஆப்பு வைத்த தீ
கலிபோர்னியா காட்டுத் தீயால் வன வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிரினங்கள் அழிந்துள்ளன. இப்போது தாவர வகைகளும் குறிப்பாக புகழ் பெற்ற கலிபோர்னியா ஒயினின் பெருமைக்கும், பிரபலத்திற்கும், அதுதொடர்பான வர்த்தகத்திற்கும் இந்த காட்டுத் தீ ஆப்பு வைத்திருப்பது அங்குள்ளவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம். இதிலிருந்து மீள சற்று காலமாகுமாம்.
-
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications