பிரஷர் போடும் வங்கதேசம்.. ஹசீனாவை இந்தியா நாடுகடத்துமா? சட்டம் சொல்வது என்ன
டெல்லி: வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் மரணத் தண்டனையை விதித்திருந்தது. இதையடுத்து அவரை நாடுகடத்த வேண்டும் என்றும் வங்கதேசத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஹசீனா இப்போது இந்தியாவில் வசிக்கும் நிலையில், அவரை மத்திய அரசு நாடுகடத்துமா.. ரூல்ஸ் சொல்வது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டங்களில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து, அங்கு அப்போது பிரதமராக இருந்த ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். கடந்தாண்டு நடந்த வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழங்கு வங்கதேசத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நாடுகடத்தக் கோரிக்கை
இதற்கிடையே ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதாகச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மனிதக் குலத்திற்கே எதிரான குற்றங்களை ஹசீனா செய்துள்ளதாகச் சொல்லி, ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்தது.
இந்தியா வங்கதேசம் இடையே இருக்கும் குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை வைத்தது. ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் எந்தவொரு நாடும், நட்புக்கு எதிராகச் செயல்படுவதாகவே கருத வேண்டி இருக்கிறது என்றும் குறிப்பிட்டது.
வெளியுறவுத்துறை
இந்தத் தீர்ப்பு வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கூட கருத்து தெரிவித்தது. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பை நோட் செய்துள்ளதாகவும் வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் கருத்தில் ஹசீனாவை நாடுகடத்துவது தொடர்பாக எந்தவொரு பாயிண்டும் இல்லை.
நாடுகடத்தும் ஒப்பந்தம்
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே 2013ல் நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளின் எல்லைகளில் நிலவும் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 2016ல் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு, இரு நாடுகளாலும் தேடப்படும் குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது எளிதாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டியே ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்தது.
இருப்பினும், ஹசீனா நாடுகடத்தப்படும் வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. ஹசீனா மீதான குற்றச்சாட்டு, நாடுகடத்தலுக்குத் தேவையான குறைந்தபட்ச நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலும், சில விதிகளைக் காரணம் காட்டி நாடுகடத்தலை இந்தியா மறுக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக ஒப்பந்தத்தின் 8வது பிரிவைச் சொல்லலாம்.
கோரிக்கை நிராகரிப்பு?
ஒப்பந்தத்தின் 8வது பிரிவின்படி, அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றால் நாடுகடத்தல் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அதாவது குற்றச்சாட்டில் நேர்மை இல்லை, குற்றம் முற்றிலும் அரசியல் ரீதியானது என்றால் நாடுகடத்தலை நிராகரிக்கலாம்.. ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் நல்லெண்ணத்துடன் சுமத்தப்படவில்லை என்றும், அவர் அரசியல் ரீதியாகத் துன்புறுத்தப்படலாம் என்றும் கூறி, ஹசீனாவை நாடுகடத்த இந்தியா மறுக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
ஹசீனா கடந்தாண்டு இந்தியாவுக்கு வந்தார். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அவர் டெல்லி புறநகரில் உள்ள ஒரு இடத்தில் பலத்த பாதுகாப்போடு வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications