• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாம்பு ஒயின் தயாராவது எப்படி? ஆண்மை அதிகரிக்கும் என்ற சீனர்கள், கொரியர்கள் நம்பிக்கை உண்மையா?

By Veera Kumar
|

பியோங்யாங்: ஆண்மையை பெருக்கவும், ஆணுறுப்பு நீளத்தை அதிகரிக்கவும் பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் உதவும் என்ற நம்பிக்கையில் தினமும் பாம்பு ஒயின் குடித்து வருகிறார் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன். குழந்தை போன்ற பால் வடியும் முகத்தை கொண்ட அதிபர் முகத்தில் இப்போது ஒயின் வடிந்து கொண்டுள்ளது. வட கொரியா மட்டுமின்றி சீனாவிலும் இப்படி ஒரு நம்பிக்கை உள்ளது உண்மைதான் என்றாலும் அதில் நம்பகத்தன்மை உள்ளதா என்பது ஆய்வுக்குறியது.

வட கொரிய அதிபர் குழந்தைசாமி

வட கொரிய அதிபர் குழந்தைசாமி

வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜோங்-உன். சமீப காலமாக வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். 31 வயதேயான கிம் ஜோங்-உன் உடல் பருமன் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதால்தான் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்பட்டது. இவரது உடல் பருமன் காரணமாக மனைவி ரி ஜோல்-சு கர்ப்பமடைவது தள்ளிப்போய் கொண்டுள்ளது.

ஊற வைத்த ஒயின்

ஊற வைத்த ஒயின்

இந்நிலையில்தான் தனது ஆண்மையை அதிகரிக்க பாம்பு ஒயின் குடிக்க ஆரம்பித்துள்ளார் வட கொரிய அதிபர் என்கிறது மேல்நாட்டு ஊடகங்கள்.கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பை கொன்று மதுபான பாட்டிலுக்குள் வைத்து அதற்குள் ஒயினை ஊற்றி ஊறவைத்து குடித்தால் போதை அதிகமாகும். ஆனால் இதனால் ஆண்மையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை வட கொரியாவில் உள்ளது.

ஆண் உறுப்புக்கும் நல்லதாம்

ஆண் உறுப்புக்கும் நல்லதாம்

இந்த ஒயினை குடித்தால் ஆண் உறுப்பும் நீளமடையும் என்ற நம்பிக்கை வடகொரியர்களுக்கு உள்ளது. வட கொரியாவின் சமூக வலைத்தளங்களில் இப்போது ஒரு 'பலான' ஜோக் பலமாக சுற்றிக் கொண்டுள்ளது. அதாவது பாம்பு ஒயினை குடித்து அதிபரின் ஆண் உறுப்பு மிகப் பெரியதாகிவிட்டதாகவும், எனவே குழந்தையே தேவையில்லை என்று தம்பதிகள் முடிவு செய்துவிட்டதாகவும் கலாய்த்து அந்த கிண்டல் தகவல்கள் சுற்றி வருகின்றன.

சீனாவிலும் சக்கைபோடு

சீனாவிலும் சக்கைபோடு

சீனாவில் பீர் கடை வைத்திருக்கும் லீ என்பவர் இந்த நம்பிக்கை குறித்து கூறுகையில் "எனது கடையில் பாம்பை உள்ளே போட்டு விற்பனை செய்யப்படும் அரிசி ஒயின் அதிகம் விற்பனையாகிறது. இதுபோன்ற ஒயினை குடித்தால் ஆண்மை பெருக்கம் மட்டுமின்றி, ஆண் உறுப்பும் வளரும் என்ற நம்பிக்கை சீனாவிலும் உள்ளது" என்றார்.

தயாராவது எப்படி?

தயாராவது எப்படி?

பாம்பு ஒயின் இரு வகைகளில் தயாராகிறது. விஷமுள்ள பாம்பை உயிரோடு பிடித்து பெரிய ஒயின் ஜாருக்குள் போட்டுவைத்து பல மாதங்கள் கழித்து குடிப்பது ஒருவகை. அதன் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வெட்டி ஒயினுக்குள் போட்டு வைத்து குடிப்பது மற்றொரு வகை. உடலை வெட்டி ரத்தத்தை ஒயினுடன் கலந்து வைப்பதும் உண்டு.

தேள், பூரான் உவ்வே..

தேள், பூரான் உவ்வே..

பாம்பு மட்டுமின்றி தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களையும் ஒயினுக்குள் போட்டு குடிப்பதால் போதையும், ஆண்மையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உலக அளவில் உள்ளது. சீனா, கொரிய நாடுகளிலுள்ள ஒயின் ஸ்டோர்களில் இருந்து, ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து ஐரோப்பிய நாடுகளில் வாங்கி குடிக்கிறார்கள். இதில் பெண்களும் அடக்கம். எல்லாம் 'அதுக்குத்தான்'.

இந்தியாவில் இயலாது

இந்தியாவில் இயலாது

இந்தியாவில் பாம்புகளை கொல்வதோ, பாம்பு ஒயின் சப்ளை செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அடிக்கடியும், சென்னையில் அவ்வப்போதும் இதுபோன்ற பாம்பு ஒயின்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஸ்டார் ஹோட்டல்களில் நடந்துள்ளன.

ஒருவேளை இப்படி இருக்குமோ

ஒருவேளை இப்படி இருக்குமோ

பாம்பு ஒயின் குடிப்பதால் உண்மையிலேயே ஆண்மை பெருகுமா, ஆண் உறுப்பு நீளமாகுமா என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் குடித்தவர்களின் அனுபவத்தை வைத்து இப்படி ஒரு கதை நிலவுகிறது. ஒருவேளை, பாம்பு நீளமாக இருப்பதை பார்த்து இந்த நம்பிக்கை அவர்களை ஒட்டிக்கொண்டது போல.

உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்!!!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sexual stamina during sexual intercourse can increase the size of a man’s penis,” according to the owner of a Chinese Beer store. He claims Chinese snake rice-wine is an aphrodisiac which increases a man’s sexual stamina and his penis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more