இவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கினால்.. நடுங்க வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: உலகையே உலுக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை சற்று அருகில் போய்ப் பார்த்தால் நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட பல மடங்கு அதி பயங்கரவாதிகளாக அவர்கள் உள்ளனர். பார்க்கவே அதிர்ச்சிகரமாக இருக்கிறது அவர்களது Ruthless செயல்பாடுகளைப் பார்க்கும்போது.

சின்னக் குழந்தைகளைக் கூட விடவில்லை அவர்கள். அவர்களது கையிலும் ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கி விடுகிறார்கள்.

கொல்வோம். கொன்று தீர்ப்போம்.. இது ஒன்று மட்டுமே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அது தங்களுக்குச் சாதகமாக இல்லாத யாராக இருந்தாலும் அவர்கள் விடுவதில்லை.

கொடூர தீவிரவாத அமைப்புகள்

கொடூர தீவிரவாத அமைப்புகள்

இதற்கு முன்பு அல் கொய்தா அமைப்பைத்தான் மிகக் கொடூரமான தீவிரவாத அமைப்பாக உலகம் பார்த்து வந்தது. ஆனால் அல் கொய்தாவை தூக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் இந்த ஐஎஸ் தீவிரவாதிகள்.

அருகில் போய் ஒரு பார்வை

அருகில் போய் ஒரு பார்வை

இந்த தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளை இதுவரை எந்த ஒரு நபரும் அருகில் போய்ப் பார்த்துப் படம் பிடித்து வெளி உலகுக்குக் காட்டியதில்லை. ஆனால் முதல் முறையாக ஒரு வீடியோ படம் வெளியாகியுள்ளது. அதை எடுத்துக் கொண்டு வந்துள்ளவர் ஒரு பத்திரிகையாளர்.

மெட்யான் டெய்ரி

மெட்யான் டெய்ரி

மெட்யான் டெய்ரி என்ற பத்திரிகையாளர் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளார். அந்தத் தீவிரவாதிகளுடன் கூடவே போய் அவர்களின் பேட்டிகளையும் இணைத்து, அவர்களின் தாக்குதல் உள்ளிட்ட காட்சிகளையும் இணைத்து ஒரு அருமையான ஆவணமாக இதைப் பதிவு செய்துள்ளார் மெட்யான்.

பிரிட்டிஷ் - பாலஸ்தீனிய பத்திரிகையாளர்

பிரிட்டிஷ் - பாலஸ்தீனிய பத்திரிகையாளர்

மெட்யான், பிரிட்டிஷ் பாலஸ்தீனியர் ஆவார். புகைப்படக்காரர், ஆவணப் படம் எடுப்பவர் என்று பல முகம் கொண்டவர் இவர். பாலஸ்தீனத்தில் பிறந்து இளம் வயதிலேயே பல்வேறு நாடுகளுக்குப் போய் கடைசியில் இங்கிலாந்தில் செட்டிலானவர். 2007 முதல் அல்ஜசீராவுடன் இணைந்து பணியாற்றுகிறார். மனித உரிமைகள், அகதிகள், போர்கள், ஆயுதங்கள் குறித்து நிறைய ஆவணப் படம் எடுத்துள்ளார்.

தி இஸ்லாமிக் ஸ்டேட்

தி இஸ்லாமிக் ஸ்டேட்

தற்போது தி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த ஒரு நேரடியான முதல் வீடியோ படத்தை அவர் எடுத்து வந்து உலகையே அரள வைத்துள்ளார். அதில் உள்ள காட்சிகளைப் பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. எப்படிப்பட்ட குரூர முகம் கொண்டவர்களாக இந்த அமைப்பினர் உள்ளனர் என்பது இதைப் பார்த்தால் தெரிகிறது.

மதத்தின் பெயரால்

மதத்தின் பெயரால்

ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த தீவிரவாதிகள் உள்ளனர். இவர்களின் ஈவு இரக்கமன்ற இரும்புக் கரம் கொண்ட செயல்பாடுகள், அணுகுமுறைகள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன.

ஆயுதத்தால் மட்டுமே

ஆயுதத்தால் மட்டுமே

இந்த அமைப்பின் தீவிரவாத கமாண்டர் ஒருவர் கூறுகிறார், இஸ்லாமிய ஷரியா அரசை நாங்கள் நிர்மானிப்போம். அதற்கு ஆயுதம்தான் ஒரே வழி என்று கையில் உள்ள துப்பாக்கியைத் தூக்கிக் காட்டியபடி முழக்கமிடுகிறார்.

கொன்று குவிப்பேன்

கொன்று குவிப்பேன்

அதை விட அதிர்ச்சியானது ஒரு சிறுவன் சொல்வது.. நான் சிரியா, ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவேன். அவர்கள் நல்லது செய்கிறார்கள். கெட்டவர்களை அழிக்கிறார்கள். நானும் அவர்களுடன் இணைந்து அவர்களைக் கொன்று குவிப்பேன் என்று முழக்கமிடுகிறான்.

"ரே பான்" மூசா

இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அபு மூசா என்பவர் சிரியாவில் உள்ள பகுதிகளில் இந்த கட்டுரையாளரை அழைத்துச் சென்று பல்வேறு செயல்பாடுகளையும் விளக்கிக் கூறுகிறார் - அமெரிக்கத் தயாரிப்பு ரே பான் குளிர் கண்ணாடியை அணிந்தபடி!.

ஈராக் - சிரியா நாசம்

ஈராக் - சிரியா நாசம்

இந்த அமைப்பு ஏற்கனவே சிரியா மற்றும் ஈராக்கின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டனர். தனி இஸ்லாமிய அரசை நிர்மானித்துள்ளனர். அங்கு இவர்கள் வைத்ததுதான் சட்டம். யாராவது தவறு செய்தால் பொது இடத்தில் வைத்து சுட்டுத் தள்ளி விடுகிறார்கள். தலையைத் துண்டித்து நட்டு வைக்கிறார்கள். ஒரு இடத்தில் 50 சிரிய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி நட்டு வைத்திருப்பதையும் இந்த ஆவணப் படம் காட்டுகிறது.

பொடியன் கையில் ஏகே 47

பொடியன் கையில் ஏகே 47

சின்னஞ் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு அனைவரது கையிலும் அதி நவீன துப்பாக்கிகள் கொஞ்சி விளையாடுகின்றன. சர்வ சாதாரணாக சுட்டுத் தள்ளுகிறார்கள் சிறார்களும். பீரங்கிகள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன.

அனைவருமே போராளிகள்

அனைவருமே போராளிகள்

சிரியாவின் ரக்கா நகரைப் பார்த்தால் அனைவருமே போராளிகள் போலவே இருக்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் ஆயுதத்துடன்தான் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் சட்டத்தை அமலாக்க ஒரு குரூப் கையில் ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் இரவு பகலாக நகரை வலம் வருகிறது. பைக்கில் போகும் ஒரு கணவன் மனைவியை நிறுத்தி அவர்கள் யார் என விசாரிக்கிறார்கள். பின்னர் மனைவியின் புர்காவை மாற்று. துணி இன்னும் டார்க்காக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது இந்தக் குழு. அதே போல ரோட்டில் போவோர் வருவோரில் தாங்கள் நினைத்தவர்களையெல்லாம் கூப்பிட்டு அறிவுரையை கொட்டுகின்றனர். மக்களும் இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டிய நிலையில் உள்ளதால் இவர்களை பார்த்தாலே அச்சத்தில் ஆழ்ந்தாலும் முகத்தில் சிரிப்பைக் காட்டிக் கொண்டு நடமாடுகின்றனர்.

எங்கிருந்து வருகிறது பணம், ஆயுதம்...

எங்கிருந்து வருகிறது பணம், ஆயுதம்...

இவர்களுக்குப் பெருமளவில் பணம் குவிகிறது. அதி நவீன ஆயுதங்கள் வந்து குவிகின்றன. இவர்களது ராஜாங்கம் மிகப் பெரிதாக மாறி வருகிறது. அமெரிக்காவே கூட இவர்களை எதிர்க்கும் போரில் தடுமாறுமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

பல நாடுகளின் போராளிகள்

பல நாடுகளின் போராளிகள்

இந்த அமைப்பில் உள்ளூரைச் சேர்ந்தவர்களை விட பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது ஒரு அதிர்ச்சிச் செய்தியாகும். ஒருவர் பெல்ஜியத்தில் இருந்து தனது 9 வயது மகனையும் கூட்டிக் கொண்டு வந்து இந்த அமைப்பில் இணைந்துள்ளார். மகனை போராளியாகவோ அல்லது தற்கொலைப் படை வீரனாகவோ மாற வேண்டும் என்பது இவர் விருப்பம்.

மின்னல் வேக வளர்ச்சி.. திட்டமிட்ட தாக்குதல்கள்

மின்னல் வேக வளர்ச்சி.. திட்டமிட்ட தாக்குதல்கள்

இந்த அமைப்பினர் ஜூன் மாதம்தான் சிரியா மற்றும் ஈராக்கில் ஒரே சமயத்தில் தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் மின்னல் வேகத்தில் இரு நாடுகளிலும் பல பகுதிகளைப் பிடித்து தனி நாடாகவும் அறிவித்து அபு பக்கீர் அல் பாக்தாதியை அதன் தலைவராகவும் அறிவித்து விட்டனர். இதற்கு அவர்களின் முன்கூட்டிய திட்டமிட்ட அணுகுமுறையே முக்கியக் காரணமாகும்.

எல்லாமே அதிரடி

யாரையும் கொஞ்சம் கூட யோசிக்க விடாத அளவுக்கு அதிரடியாக செயல்படுகிறார்கள் இந்தத் தீவிரவாதிகள். இதுவரை இருந்து வந்த தீவிரவாதிகளுக்கும், இவர்களுக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசம் இதுதான். தாக்குதலையும், அதன் திட்டத்தையும் அதி வேகமாக முடிவு செய்கிறார்கள். இராக்- சிரியா இடையே இருந்த எல்லையையும் எல்லைப் பகுதி செக் போஸ்டையும் அகற்றிவிட்டனர். இரண்டும் ஒரே இஸ்லாமிக் ஸ்டேட் தான் என அறிவித்துவிட்டனர். செக்போஸ்ட்டில் இருந்தவர்களை ஒரு வண்டியில் அள்ளிச் செல்வதையும் இந்த வீடியோ காட்டுகிறது. உங்கள் தலையை வெட்டுவோம் என்று கூறியபடியே அழைத்துச் செல்கின்றனர்.

அமெரிக்க ஆயுதங்களே அதிகம்

அமெரிக்க ஆயுதங்களே அதிகம்

இவர்கள் வைத்திருக்கும் பீரங்கிகள், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் என அனைத்து ஆயுதங்களும் பெரும்பாலும் அமெரிக்கத் தயாரிப்புகளே. இவற்றை இவர்கள் சுட்டது இராக் ராணுவத்திடம் இருந்தும், சிரிய ராணுவத்திடம் இருந்தும் தான். ராணுவத்தினரை தாக்கி ஓட ஓட விரட்டிவிட்டு ஆயுத கிடங்குகளை அப்படியே கபளீகரம் செய்துவிட்டனர். இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருவது சதாம் ஹூசேனின் முன்னாள் பாத் கட்சி உறுப்பினர்களும் சதாமின் முன்னாள் ராணுவ கமாண்டர்களும் தான்.

அணு ஆயுதம் சிக்கினால்

அணு ஆயுதம் சிக்கினால்

இவர்களிடம் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிக்கினால், அங்குள்ள அணு ஆயுதங்கள் சிக்கினால் உலகம் என்னாகும் என்பைத நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எழுதிப் படிப்பதை விட இந்த வீடியோவைப் பார்த்தால்தான் இவர்களின் உண்மையான முகமும், அதன் வீரியமும் முழுமையாகப் புரியும். பாருங்கள்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+