கனடாவில் சீக்கிய தலைவர் கொலை.. இந்தியா மீது தவறு இல்லை! வழிக்கு வந்த கனடா!
ஒட்டாவா: கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில், இந்தியா மீது சரமாரியான புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக சீக்கிய தலைவர் கொலை வழக்கில், இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
கனடாவில் நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கனடா நாட்டின் மத்திய அரசு தற்போது கருதுகிறது. இப்படி சொல்லப்பட்டதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய பஞ்சாயத்து
இந்திய வம்சாவளியான சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லாந்தில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பிறகு கனடாவில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கும், கொலைக்கும் பின்னால் இந்தியா இருக்கிறது என்று முந்தைய அரசு வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தது. அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் ஒரு கனடா குடியுரிமை பெற்றவரை இந்திய அரசு ஏஜெண்டுகள் கொன்றதற்கான நம்பகமான ஆதாரம் இருப்பதாகக் கூறினார்.
இந்தியா கவலை
இது மிக தீவிரமான குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்திருந்தது. இது இரு நாடுகளிலிருந்தும் தூதர்களை வெளியேற்றியது. கனடா சீக்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா கவலை தெரிவிக்க, கனடாவோ, இந்தியா எல்லையை மீறியது என வெளிப்படையாக சாடியது.
140 கோடி மக்கள்
ஆனால் தற்போது இந்த நிலைப்பாட்டை கனடா அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அமெரிக்காவின் வரி அழுத்தம். இது கனடாவை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவே வர்த்தகத்திற்கு வேறு நாட்டை தேடி வருகிறது. இரண்டாவது காரணம், கனடா வர்த்தகம் செய்ய ஏற்ற நாடு இந்தியாதான். இங்கு 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். எனவே இந்த மக்கள் தொகையை கனடா மார்க்கெட்டாக பார்க்கிறது.
வழிக்கு வந்த கனடா
இதன் காரணமாகவே இந்தியாவுடனான மோதல் போக்கை கனடா தவிர்த்து வருகிறது. விரைவில் கனடா பிரதமர், 9 நாட்கள் பயணமாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே இந்த பயணத்திற்கு முன்பாக, இந்தியா-கனடா உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார். எனவேதான் முந்தைய சம்பவத்தை அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications