Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடா பிரதமர் தேர்தல் இன்று.. லிபரல் கட்சியின் மார்க் கார்னிக்கு வெற்றி வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் இன்று கனடாவில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. கனடா பிரதமர் தேர்தலில் மார்க் கார்னி மற்றும் பியர் பொய்லிவ்ரே இடையே போட்டி நிலவுகிறது.

கனடாவில் தற்போது லிபரல் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக மார்க் கார்னே பதவி வகித்து வருகிறார். அவருக்கு முன்னால் ஒன்பது வருடங்களாகப் பிரதமராக இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2021 பொது தேர்தலில், அவர் தலைவராக இருந்த லிபரல் கட்சி, 160 இடங்களைக் கைப்பற்றினாலும், பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. ஆகவே, அவர் கட்சிக்கு தன்னுடைய 24 பார்லிமென்ட் அங்கத்தினர் ஆதரவை அளித்தனர். ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் ஆனார்.

Canada Heads to Polls on April 28 as Mark Carney Faces Pierre Poilievre in Pivotal Election

பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 119 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றது. கடந்த 2 வருடங்களாக கனடாவில் பணவீக்கம், அயல் நாடுகளிலிருந்து பெருமளவு குடியேற்றம், இதனால் ஏற்பட்ட வீட்டு வாடகை அதிகரிப்பு ஆகிய காரணங்களினால், ட்ரூடோ பொது மக்களின் ஆதரவை இழக்க ஆரம்பித்தார். மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்க, எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கு ஆதரவு ஓங்கியது.

இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், புதிய ஜனநாயகக் கட்சி, தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. லிபரல் கட்சிக்குள்ளும் ட்ரூடோவிற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், ஜனவரி 6ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்தார். லிபரல் கட்சிக்கு புதிய தலைவராக மார்க் கார்னே பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் அமர்ந்தார். இவர், கவர்னராக கனடா வங்கியை நிர்வகித்து வந்தார்.

அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிப்பதற்கும், அமெரிக்க, கனடா வர்த்தகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், மக்களின் முழு ஆதரவைப் பெற்ற அரசு வேண்டும் என்று, ஆளுஅர் ஜெனரல் மேரி சைமனிடம், ஏப்ரல் 28, 2025 அன்று பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்டு, கவர்னர் ஜெனரல், பொதுத் தேர்தல் நடத்துவதற்கான உத்தரவை மார்ச் 23 ஆம் தேதி வழங்கினார்

இதையடுத்து இன்று தேர்தல் நடக்கிறது. கனடாவில் வாக்களிக்க தகுதியுடைய 28 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் ரைடிங்ஸ் என்றும் அழைக்கப்படும் 343 தனிப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடந்து வந்த கருத்துக் கணிப்புகளில் பிரதமர் கார்னி சிறிது முன்னிலை வகிக்கிறார், ஆனால் பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி சமீபத்திய நாட்களில் பின்தங்கி உள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவைத் தொடர்ந்து, முதல்கட்ட முடிவுகள் மாலை 7 மணி முதல் மாலை 7:30 மணிக்குள் வெளியாகக்கூடும். அப்போது நான்கு அட்லாண்டிக் மாகாணங்களில் வாக்குப்பதிவு நேரம் முடிவடைகிறது. பெரும்பாலான முடிவுகள் இரவு 9:30 மணிக்கு வெளியிடப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+