அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.. கனடா பிரதமர் சொன்ன வார்த்தை.. ஒரு நொடி கப்சிப்

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, சர்வதேச சிஸ்டம் குறித்து இதுவரை இல்லாத வகையில் காட்டமான கருத்துகளை முன்வைத்தார். அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்த அவர், அமெரிக்கா தலைமையிலான குளோபல் ஆர்டர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தில் இப்போது உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க உலக தலைவர்கள் ஒன்றுகூடியிருக்கும் சூழலில், இந்தக் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி சில அதிரடி கருத்துகளைத் தெரிவித்தார்.

Canada on Trump trade threat PM Carney Davos says Old World Order Dead Great Powers Weaponize Trade

கனடா பிரதமர்

விதிகள் அடிப்படையிலான இயங்கும் குளோபல் ஆர்டர் இனி செல்லாது என்று கார்னி குறிப்பிட்டார். கார்னி வெளிப்படையாக மேலும், "நான் நேரடியாகக் கூறுகிறேன். இப்போது முக்கியமான மாற்றம் நடக்கவில்லை.. மாறாக இது ஒரு முறிவு. பழைய நிலை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்..

அமெரிக்கா அல்லது அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை கார்னி நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர், "ஒரு காலத்தில் செல்வத்தையும் வளர்ச்சியையும் பகிர்கிறோம் எனச் சொல்லி பொருளாதார ஒருங்கிணைப்பை நடத்திய பெரும் சக்திகள் (அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) இப்போது அதே வணிகத்தை ஆயுதமாக்கிப் பயன்படுத்துகிறது.

எல்லாம் ஓவர்

சர்வதேச விதிகள் அடிப்படையிலான குளோல் ஆர்டர் பொய்யானது என்று எங்களுக்குத் தெரியும். தங்களுக்குத் தேவையான நேரத்தில் இதுபோன்ற விதிகளில் இருந்து பெரும் சக்திகள் விலக்கிக் கொள்ளும். வர்த்தக விதிகள் பாரபட்சமாக இருப்பதாகப் பொய்யான கதைகளைச் சொல்லி, குழப்பங்கள் நடக்கிறது. இத்தனை காலம் அமெரிக்காவின் தலைமை உலகிற்குப் பல பொது நன்மைகளை வழங்க உதவியது. ஆனால் இனியும் அது செயல்படாது என்றே நினைக்கிறேன்.

நிதி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள், பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளன. வரிகள், நிதி அமைப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை அழுத்தம் கொடுக்கும் கருவிகளாகச் சில பெரிய சக்திகள் பயன்படுத்துகின்றன. அவர்கள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதங்களாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. வரிகளை மிரட்டல் விடுக்கவும் நிதி கட்டமைப்பைக் கட்டாயப்படுத்தவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன" என்றார்.

என்ன செய்ய வேண்டும்

இதை மனதில் வைத்துக் கொண்டு கனடா தேவையான கொள்கை முடிவுகளை எடுக்கும் என்றும் கார்னி தெரிவித்தார். இது உள்நாட்டுத் திறனை வலுப்படுத்துவதுடன், எந்தவொரு நாட்டையும் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் என்றும் கார்னி தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐநா சபை போன்ற உலக அமைப்புகள் பலவீனமாக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அதிகச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தன்னை தானாக பார்த்துக் கொள்ள முடியாத நாடுகளுக்குக் குறைவான ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலம் திரும்ப வராது

அவர் தனது உரையை முடிக்கும்போது, "கடந்த காலம் திரும்பி வரும் என நினைக்காதீர்கள். அந்தப் பழைய குளோபல் ஆர்டர் திரும்பி வரப்போவதில்லை. நாம் அதற்காக வருத்தப்படக்கூடாது.. இந்த முறிவிலிருந்து, நாம் சிறந்த, வலிமையான ஒன்றைக் கட்டமைக்க முடியும்" என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அவர் எந்தவொரு இடத்திலும் அமெரிக்கா அல்லது டிரம்ப்பை நேரடியாகக் குற்றஞ்சாட்டவில்லை என்றாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. கார்னியின் இந்தப் பேச்சைத் தொடர்ந்தே காசா அமைதிக் குழுவில் சேர கனடாவுக்கு அனுப்பிய அழைப்பை அமெரிக்கா திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+