இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர்
சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக நிறைய அகதிகள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள். இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசி இருக்கிறார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

எவ்வளவு
இதுவரை முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 300 பேரு, கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்களுக்கு அந்த நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக விதியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

டிவிட்டர் ஹேஷ்டேக்
அதேபோல் இவர்களை பற்றி தகவலை பகிர்ந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதமே 'வெல்கம் டூ கனடா' என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அந்நாட்டு அதிகாரிகள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதேபோல் அகதிகளாக நாட்டிற்குள் வரும் மக்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.

பிரதமர் பெயர்
2015ல் இருந்தே கனடா இது போன்ற அகதிகளுக்கு வீடு அளித்து வருகிறது. அதேபோல் பல சிரியா அகதிகள் தங்களுக்கு கனடாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜஸ்டின் என்று கனடா பிரதமர் பெயர் வைத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு படிக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்களுடையது
இதுகுறித்து ஜஸ்டின் அந்நாட்டு புதிய குடிமக்களிடம் பேசினார். அப்போது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications