அமெரிக்காவோடு அன்னம் தண்ணி பழக கூடாது! உறவை முறித்துக் கொண்ட கனடா! இந்தியாவுக்கும் சிக்கல்
வாஷிங்டன்: தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் கார் உதிரி பாகங்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியிருப்பதற்கு கனடா கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.
வரி காரணமாக கனடா-அமெரிக்கா வர்த்தக உறவு பாதிக்கப்படும். இது இந்தியாவிலும் எதிரொலிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உறவு துண்டிப்பு:
தடாலடி டிரம்ப் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது. அப்படித்தான் பக்கத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் கார்களுக்கும், வாகன உதிரி பாகங்களுக்கும் 25% வரியை விதித்திருக்கிறார். இதனால் கனடா கடுப்பாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, வரி விவகாரத்தை கண்டித்திருக்கிறார். இனி நாங்கள் யாரும் அமெரிக்காவுடன் அன்னம் தண்ணி பழக மாட்டோம், ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறியுள்ளார்.
மாஸ் காட்டும் கனடா:
கனடா மட்டும் கிடையாது மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி நாடுகளும் அமெரிக்காவின் வரியால் பாதிக்கப்படும். இந்த நாடுகள் அமெரிக்க கார் சந்தையில் 64% தேவைகளை பூர்த்தி செய்கிறது.
1. மெக்சிகோ - 21%
2. ஜப்பான் - 14%
3. கனடா - 11%
4. தென் கொரியா - 10%
5. ஜெர்மனி - 8%
அமெரிக்காவின் தேவை:
இதில் உதாரணமாக கனடாவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் ஓடும் 10 கார்களில் 1 கார் கனடாவில் உற்பத்தியாகிறது. ஏனெனில் அமெரிக்காவில் தயாரிப்பு செலவு அதிகம். கனடாவில் கம்மி. ஆகவே அமெரிக்க நிறுவனங்கள் கனடாவில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி அங்கு பேக்டரி அமைத்து கார்களை தயாரித்து அமெரிக்காவுக்குள் அனுப்பி வருகின்றன. கனடாவில் கார் தயாரிப்பு குறைவுதான். ஆனால் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் கனடா 14% மற்றும் மெக்சிகோ 37% தேவையை பூர்த்தி செய்கிறது. இரண்டையும் சேர்த்தால் 51%.
வரி விஷயத்தில் கெடுபிடி:
கனடா இல்லையெனில் அமெரிக்காவில் கார்கள் ஓடுவதே கொஞ்சம் கஷ்டம்தான். இவ்வளவு தேவைகளை வைத்துக்கொண்டு எதற்காக டிரம்ப் வரியை விதிக்க வேண்டும்? அதான் முதலில் சொன்னேனே.. டிரம்ப் என்ன செய்வார் என முன்கூட்டியே கணிப்பது கஷ்டம் என.
சரி அமெரிக்கா-கனடா பஞ்சாயத்தை விட்டு தள்ளுங்க. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு என கேட்கிறீர்களா? பாதிப்பு இருக்கு. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பெருசா கார் ஏற்றுமதி ஆவது கிடையாது. ஆனால் உதிரி பாகங்கள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல கனடா, மெக்சிகோவில் உள்ள Ford, GM, Tesla, BMW போன்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தேவையான டெக் விஷயங்களை இந்தியாவில் உள்ள Infosys, TCS, Wipro, HCL போன்ற IT நிறுவனங்கள் பார்த்து கொடுக்கிறது.
இந்தியாவுக்கும் சிக்கல்:
அமெரிக்காவுடன் இந்த நாடுகள் முறைத்துக்கொண்டதால், அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் டெக் செலவை குறைக்கும். இது இந்தியர்களுக்கு பாதிப்புதான். தவிர Bharat Forge, Motherson Sumi, Sundaram Fasteners போன்ற உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த விவகாரம் எல்லாம் சுற்றி சுற்றி மீண்டும் டிரம்ப் தலையில்தான் வந்து விடியும். வேலியில் போகிற ஓணானை மடியில் கட்டிய கதையாக இது இருக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது குறித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications