டிரம்ப்பை ஜெயிக்க விட மாட்டேன்.. முடிஞ்சதை பாருங்க.. டிரம்ப்பிற்கு ஆப்பு வைத்த கனடாவின் புதிய "தலை"
ஓட்டவா: கனடாவின் அடுத்த லிபரல் கட்சித் தலைவராகவும், கனடாவின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி அறிவிக்கப்பட்டார், ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக அந்நாட்டின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் அடுத்த பிரதமர் மார்க் கார்னி, கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது.

டிரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம். இந்த மோதலில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் உணர்ந்து கொண்ட பாடம் ஒன்றுதான். எங்களுக்கு ஒரு அண்டை நாடு உள்ளது. இத்தனை காலம் நாங்கள் நம்பிய அந்த அண்டை நாட்டை இனியும் நம்ப முடியாது, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிப்பதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் தீவிரமாக இருக்கிறாராம். அவர் இத்தனை நாட்கள் இந்த விவகாரத்தில் அவர் சீரியஸாக பேசவில்லை என்று கருத்துக்கள் வைக்கப்பட்ட நிலையில்.. அவர் உண்மையில் இதில் தீவிரமாக இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா டிரம்ப் மோதல்
கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.
கனடா ஏன் அமெரிக்காவிற்கு மிக முக்கியம்
2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது.
2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அளவு ஆகும்.
2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது.
கனடா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.
தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications