கனடா ஆண்ட்டிக்கு வந்த கல்யாண ஆசை.. 1 வருட காதலனைத் தேடி இந்தியா வந்தாச்சு.. கடைசியில் செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கனடா: கனடாவிலிருந்து இந்தியா வந்த பெண், தான் காதலித்த 31 வயது இளைஞரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சுமார் ஒரு வருடமாகவே டேட்டிங் ஆப் மூலம் 2 பேரும் பழகியிருக்கிறார்கள்.. பிறகு திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்தியா வந்த பிறகு அந்த இளைஞர் திருமணத்துக்கு மறுத்ததால், இந்த விவகாரம் கனடா தூதரகம் வரை சென்றுள்ளது. என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்தவர் நிதின்.. 31 வயதாகிறது.. அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும், சுமார் ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் ஆப் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

Canadian Aunty Marriage

கனடா பெண்ணுக்கு வந்த காதல்

இருவரும் அந்த ஆப் வழியாக தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள்.. பிறகு அவர்களுடைய உரையாடல் சோஷியல் மீடியாவுக்கும் சென்றுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் கனடாவிலிருந்து இந்தியா வர திட்டமிட்டுள்ளார். டூர் விசா பெற்று திருமணக் கனவுடன் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

காதலனை தேடி டெல்லி வந்த பெண்

கடந்த நவம்பர் 11-ம் தேதி அந்த பெண் டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக நிதின் ஏர்போர்ட்டுக்கு நேரில் சென்றுள்ளார். பிறகு 2 பேரும் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானாவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு தனது தாய் மாமா மற்றும் அத்தை வசிக்கும் வீட்டுக்கு, அந்த பெண்ணை நிதின் அழைத்துச் சென்றுள்ளார். அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் 2 பேருமே தங்கியுள்ளனர். சுமார் 2 நாட்கள் அங்கு இருந்துள்ளனர். திருமணம் குறித்த பேச்சும் எழுந்துள்ளது..

அதிர்ச்சியில் அரியானா இளைஞர்

அப்போதுதான் அந்த பெண்ணுக்கு சுமார் 61 வயது என்பதும், நிதினுக்கு 31 வயது என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் உள்ளது.. இந்த வயது விஷயம் தெரிந்து நிதின் அதிர்ச்சியடைந்தார்.. அந்த பெண்ணை திருமணம் செய்ய நிதின் மறுக்கவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வருடமாக திருமணம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டு, திடீரென திருமணம் செய்ய முடியாமுத என்றால் என்ன அர்த்தம்? என்று அந்த பெண் நிதினிடம் கேள்வி எழுப்பினார்..

கனடா தூதரகத்தை தொடர்பு கொண்ட பெண்

இந்த பிரச்சனையை, அந்த பெண் கனடா தூதரகத்திடம் கொண்டு சென்றார்.. தனக்கும் நிதினுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் சொன்னார்.. இதையடுத்து கனடா தூதரகம் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. இதனடிப்படையில் நீம்ரானா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

அதாவது பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதாக நிதினை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.. பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.. அந்த பெண்ணை, ராஜஸ்தானின் கோட்புட்லியில் உள்ள கோர் சென்டரில் தங்க வைத்துள்ளனர்.. தற்போது அவரை பாதுகாப்பாக மீண்டும் கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கனடா தூதரகத்துடனும் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.. ஆனால், கனடாவிலிருந்து திருமணத்துக்காக இந்தியா வந்த பெண், கடும் அதிருப்தியில் உள்ளாராம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+