என்னங்க இப்படி பயப்படுறாரு! இந்திய ஊடகங்களை பார்த்துமே ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல்.. பரவும் வீடியோ
ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாத ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் பின்னணியில் இந்தியா உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது இருநாடுகள் இடையேயான உறவை பாதித்துள்ளது. இந்நிலையில் ஐநாவில் இந்தியா ஊடகங்களை பார்த்த ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி பல போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது, நாட்டு நலனுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. ஆனால் கனடா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதோடு இந்திய தூதரை வெளியேற்றியது. அதேபோல் இந்தியாவும் கனடா தூதரை வெளியே்றியது. மேலும் இந்தியாவில் உள்ள கனடர்கள் பாதுகாப்பாக இருக்க கனடா அறிவுறுத்தியது. அதேபோல் இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது.
தற்போது இந்தி விவகாரங்களில் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளும் தலையிட தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முழுவீச்சில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஐநாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்றார். அப்போது இந்திய ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். இதை கவனித்த ஜஸ்டின் ட்ரூடோ விலகி சென்றார். இந்திய ஊடகங்கள் ஏதேனும் கேள்வி கேட்கும்போது அவர் அளிக்கும் பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நினைத்து ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களை தவிர்த்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications