இங்கே ஜல்லிக்கட்டுக்கு தடை … அங்கே பொங்கலைப் போற்றிப் புகழும் கனடா பிரதமர்!
ஆடவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துக்களை வீடியோ வடிவில் பேசி கூறியுள்ளார்.
வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்ச் மொழியிலும் பேசுகிறார்.
"அடுத்த சில நாட்கள் கனடாவிலும் உலகெங்கும் தமிழர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். 2016ம் ஆண்டு கனடா பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன், ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதம் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொருவரும் கனடியன் தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய நாடு வலிமையானதாகவும் பொருளாதார பலமிக்கதாகவும் இருப்பதற்கு கனடியன் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது.

இது கனடா நாடு உருவான 150 வது ஆண்டாகும். பல்வேறு கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கு சிறந்த ஆண்டாகவும் அமைகிறது.அது நமது நாட்டை அனைவரும் வசிக்கத்தக்க அருமையான ஒன்றாக்கிறது., அறுவடை திருவிழாவான தைப்பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைய, நானும் என் மனைவி ஸோஃபியும் மற்றும் குடும்பத்தினரும் வாழ்த்துகிறோம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் முன்னதாக நடைபெற்ற தமிழர் விழாவில் சிலம்பாட்டக் குழுவினருடன் சேர்ந்து கம்பு சுற்றி ஆடியது குறிப்பிடத்தக்கதாகும்.. பிரதமரின் பொங்கல் வாழ்த்துக்கு பிறகு அந்த பழைய படம் சமூக வலைத் தளங்களில் வைராலக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 45 வயதே நிரம்பிய ஜஸ்டின் ட்ருடோ பிரதமராக பதவியேற்றார். ஜஸ்டினின் தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். 2000வது ஆண்டில் அவர் இறந்த போது ஜஸ்டின் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆசிரியராக மற்றும் வழக்கறிஞராக பணியாற்றிய ஜஸ்டின் தந்தை இறந்த எட்டு ஆண்டுகள் கழித்து அரசியலில் இறங்கினார். அடுத்த எட்டாவது ஆண்டில் கனடாவின் பிரதமரும் ஆகிவிட்டார்.
-இர தினகர்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications