பமீலாவை பலர் பலாத்காரம் செய்த சம்பவம்.. கனடா போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: பமீலா ஆண்டர்சன் சிறு வயதில் இருந்தபோதும், பின்னரும் பலர் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ள புகார் குறித்து கனடா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனராம்.

பேவாட்ச் நாயகி பமீலா ஆண்டர்சன் சமீபத்தில் கேன்ஸ் பட விழாவின்போது பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார். அப்போது தான் சிறு வயதாக இருந்தபோது தன்னைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த நபரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும், பின்னர் இளம் வயதில் தனது தோழியின் நண்பராலும், பிறகு தனது காதலர் மற்றும் அவரது நண்பர்களாலும் குருப் ரேப்புக்கு ஆளானதாகவும் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பமீலா கூறியதன் அடிப்படையில் கனடா போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

வான்கூவரில் பலாத்காரம்

வான்கூவரில் பலாத்காரம்

கனடாவின் வான்கூவர் நகரில் தான் சிறு வயதைக் கழித்தபோது பலமுறை பாலியல் சீண்டல்களுக்குள்ளானதாக கூறியிருந்தார் பமீலா. மேலும் தனது தோழியின் சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது காதலர் மற்றும் நண்பர்களால் குரூப் ரேப் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார் பமீலா.

கனடா போலீஸ் விசாரணை

கனடா போலீஸ் விசாரணை

இது பெரும் பரபரப்பைஏற்படுத்திய நிலையில் தற்போது பமீலா சொல்லியுள்ளதன் அடிப்படையில் அதை வைத்து ராயல் கனடியன் மெளன்ட் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பமீலாவிடமும் விசாரணை

பமீலாவிடமும் விசாரணை

மேலும் பமீலாவிடமும் இதுதொடர்பாக அவர்கள் விரைவில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனராம்.

ஆறிலிருந்து 10 வரை... 12 வயதில் ஒருமுறை..

ஆறிலிருந்து 10 வரை... 12 வயதில் ஒருமுறை..

முன்னதாக பமீலா கூறுகையில் தனக்கு 6 வயதாக இருந்தது முதல் 10 வயது வரை தன்னைக் காக்க நியமிக்கப்பட்டிருந்தவரால் பலமுறை பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானதாக கூறியிருந்தார். பின்னர் 12 வயதில் தனது தோழியின் 25 வயது சகோதரரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருநதார். அதன் பின்னர் தனது காதலர் மற்றும் அவரது 6 நண்பர்களால் குரூப் ரேப்புக்குள்ளானதாகவும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதிர்ச்சியில் தாயார்

அதிர்ச்சியில் தாயார்

இதற்கிடையே, தனது மகள் இத்தனை முறை பாலியல் தொல்லைக்குள்ளானது குறித்து பமீலாவின் தாயார் கரோல் ஆண்டர்சன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

மிகவும் மோசமாக உணர்கிறேன்

மிகவும் மோசமாக உணர்கிறேன்

இதுகுறித்து கரோல் கூறுகையில், இது மிகவும் கொடுமையானது, மோசமானது. மிகவும் மோசமாக உணர்கிறேன். இத்தனை துயரத்தையும் இத்தனை நாள் அவர் எப்படி மனதுக்குள் வைத்திருந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

கவனிக்காமல் விட்டு விட்டோமே...

கவனிக்காமல் விட்டு விட்டோமே...

நானும் எனது கணவர் பேரியும் எங்களது பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோமோ என்று வருந்துகிறேன். இதைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+