கடும் நெருக்கடி.. பணிந்த ஜஸ்டின் ட்ரூடோ! கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக உள்ளார். அந்த நாட்டில் வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு உள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவில் தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை ஜஸ்டின் ட்ரூடோ கையாண்ட விதம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்தியாவுக்கு எதிராக உறுதியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் இந்தியாவை இந்த விவகாரத்தில் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால், அவரது சொந்த கட்சியில் கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
ஜக்மீத் சிங்கும் எதிர்ப்பு
மற்றொரு பக்கம் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்பும் ஜஸ்டின் ட்ரூடோவை சீண்டும் வகையில் பேசி வருகிறார். கனடாவை அமெரிக்கவின் 51-வது மகாணமாக இணைக்க வேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாகவும் கூட டிரம்ப் கூறினார். சர்வதேச நாடுகளுடனான உறவு ஒருபக்கம் என்றால் அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், ட்ருடோவிற்கு எதிராக கிளம்பினார். ட்ரூடோ அரசு மீது வரும் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். இதனால் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
இத்தகைய சூழலில், கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். லிபரல் பார்ட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ துறந்துள்ளார். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்கலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் பிரதமராக ஆட்சியில் இருந்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெறவில்லை. எனினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications