துரோகம் செய்த கணவனின் அஸ்தியை தின்ற மனைவி.. அதுவும் என்ன கலந்து தெரியுமா?.. சீ.. சீ..
கனடா: உயிருக்கு உயிராக நேசித்த ஒருவர் துரோகம் செய்தால் அது தாங்க முடியாத வலியை கொடுக்கும். அந்த நபர் உயிருடன் இருந்தால் ஆதங்கத்தை கொட்ட முடியும். அதுவே அவர் உயிருடன் இல்லை என்றால் என்ன செய்ய முடியும். கனடாவில் தன் கணவர் துரோகம் செய்துவிட்டார் என்பதை, ஒருபெண் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லை. தன் கணவனை அவமானப்படுத்த நினைத்த அந்தப் பெண், கணவனின் அஸ்தியை சாப்பிட்டுள்ளார். அதில் அவர் கலந்த விசயம் தான் ஹைலைட்.

கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெஸிகா வைட். இவர் சமீபத்தில், A Widow’s guide tp Dead Bastards என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களால் மொத்த உலகமும் அதிர்ந்து போயுள்ளது. ஜெஸிகா வைட்டுக்கு, அவரின் கணவர் ஷான் வைட் தான் உலகமே. ஷான் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிக்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சென்றுள்ளார். அப்போது அங்கு திடீர் உடல்நலக்குறைவால் ஷான் உயிரிழந்தார். அதிர்ச்சி தகவலறிந்த ஜெஸிகா டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அப்போது கணவன் ஷானின் ஐபேடில் எதையோ தேடுவதற்காக எடுத்து பிரவுஸிங் செய்துள்ளார். அவர் தேடியது ஒன்று. ஆனால் பிரவுஸிங் ஹிஸ்டரியில் பாலியல் ஆபாச சமாச்சாரங்களாக வந்து கொட்டியுள்ளது. இதைப் பார்த்த ஜெஸிகாவுக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது. பிரவுஸிங் ஹிஸ்டரி முழுக்க பாலியல் சம்மந்தமாகவே இருந்ததால் ஜெஸிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் விசாரித்தபோது, ஷானுக்கு பல்வேறு பெண்களுடன் பாலியல் உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதற்காகவே அவர் அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களுடன் டேட்டிங்கும் சென்றுள்ளார். ஷானின் பென்ட்ரைவை சோதனை செய்து பார்த்தபோது, அதிலும் ஜெஸிகாவுக்கு அதிர்ச்சியே கிடைத்துள்ளது. அதிலும் ஏராளமான ஆபாச வீடியோக்கள் குவிந்துள்ளன. தனது பர்ஸ்னெல் கம்ப்யூட்டரிலும் ஷான் ஏராளமான ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து வைத்துள்ளார்.
ஜெஸிகாவிடம், அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வர தாமதம் ஆகும் என்று கூறிவிட்டு, ஆபாச வீடியோக்களை பார்த்தது தெரியவந்துள்ளது. தன் கணவன் தனக்கு துரோகம் செய்ததை அவரின் மரணத்திற்குப் பிறகு கண்டுபிடித்தாலும், ஜெஸிகாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஷான் இறந்த துக்கத்தைவிட அவர் ஏமாற்றிய ஆத்திரத்தால் ஜெஸிகா மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளார். இதுகுறித்து ஜெஸிகா கூறுகையில், கணவரிடம் இப்படி ஏமாந்துவிட்டோமே என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இறுதிச் சடங்கு முடிந்தவுடன் கணவரின் அஸ்தி கொடுக்கப்பட்டது. பையில் இருந்து அந்த சாம்பலை கத்தியால் கிழித்து வெளியில் எடுத்தேன்.
என் கணவன் ஷானை அவமானப்படுத்த முடிவு செய்தேன். அதனால் அவரின் அஸ்தியில் என் வளர்ப்பு நாயின் மலத்தை கலந்தேன். எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. வேறு வழியில்லாமல் அதில் கொஞ்சம் சாப்பிடவும் செய்தேன் என்றவர் அது எப்படி இருந்தது என்றும் விளக்கியுள்ளார்.
அஸ்தி பேக்கிங் சோடாவை விட சற்று சொசொரப்பாகவும், உப்பை விட லேசாகவும் இருந்தது. ஷான் இறந்த பிறகு நான் புதிய வாழ்க்கையை தேடிக் கொண்டேன். இருப்பினும் நான் அவரை நினைக்காத நாள் இல்லை. அவர் இறந்தபோதே, என்னுடைய உடலின் ஒரு பாகமுதம் மரணித்ததாகவே நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications