ஆப்கானிஸ்தான் மருத்துவமனை அருகே கார் குண்டு வெடிப்பு - 30 பேர் பலி...70 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது.

புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்த சற்று நேரத்தில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் பலத்த சேதமடைந்தன.
வெடிகுண்டு தாக்குதலில் மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிடச் சென்றவர்கள்.
வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புனித ரமலான் மாதத்தில் நிகழ்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதல் ஆப்கானிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications