4வது மாடி பார்க்கிங்கிலிருந்து கீழே பறந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய மூதாட்டி - வீடியோ
அமெரிக்காவில் மாடி பார்க்கிங் கட்டிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மாடியில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளது.
Recommended Video

கலிபோர்னியா: அமெரிக்காவில் மாடி பார்க்கிங் கட்டிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மாடியில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளது.
4வது மாடியில் இருந்த கார், மாடியில் இருந்து அப்படியே வெளியே வந்துள்ளது. கடைசியில் கீழே விழாமல் அந்த கார் அங்கு இருந்த கம்பிகளில் தொங்கிக் கொண்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
|
என்ன ஆனது
பார்க்கிங் கீழே நடந்து சென்று கொண்டிருந்த மக்கள்தான் இந்த விபத்தை கவனித்து இருக்கிறார்கள். மேலே 4வது மாடியில் கார் வெளியே வந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. சரியாக ஒரு மணி நேரம் வரை கார் இப்படியே தொங்கிக் கொண்டிருந்துள்ளது. கீழே இருந்த மக்கள் தீயணைப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
|
கஷ்டம்
அந்த கார் அங்கு இருந்த கேபிள்களில் சிக்கி தொங்கி கொண்டிருந்துள்ளது. பணியாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டும் அந்த வாகனத்தை மீட்க முடியவில்லை. கார் இஞ்சினை நிறுத்த முடியாததால், வாகனத்தை மீட்பது கஷ்டமாக இருந்துள்ளது. காருக்குள் இருந்த நபர் அதற்குள் அடைப்பட்டு இருந்துள்ளார்.
|
காப்பாற்றினார்கள்
கடைசியில் பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு படையினர் அந்த காரையும் காரில் இருந்தவரையும் காப்பாற்றி உள்ளனர். அந்த காருக்குள் இருந்தது ஒரு மூதாட்டி என்று கூறப்பட்டுள்ளது. அந்த மூதாட்டிக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. அவர் மருத்துவமனையில் சில மணி நேரம் சிகிச்சை பெற்றார்.

எப்படி நடந்தது
அந்த மூதாட்டி காரை நிறுத்தும் போது கால் தவறி ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கிறார். இதில் தவறுதலாக கார் வெளியே சென்றுள்ளது. அந்த சுவற்றில் கேபிள் இருந்த காரணத்தால் நூலிழையில் அவர் தப்பித்து இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications