டி-மார்ட் இதுபோல முடிவ எடுத்தா செம்ம உதவியா இருக்கும்.. சூப்பரான அறிவிப்பை அறிவித்த கேரிஃபோர் ரீடெய்லர்!

Subscribe to Oneindia Tamil

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், 28வது கட்சிகளின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஐநா மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கைக்கான உச்சி மாநாடு ஆகும். சர்வதேச தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர். இதுதவிர, சில நிறுவனங்கள், நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சூற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள் என பலர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் மஜித் அல் ஃபுட்டைம் ரீடெயில் (Majid Al Futtaim Retail) நிறுவனமும் கலந்துக் கொண்டது. இதனுடன் இணைந்து நிறுவனத்தின் 16 எஃப்எம்சிஜி (Fast-Moving Consumer Goods) கூட்டாளர்களும் சிஓபி 28-இல் கலந்துக் கொண்டனர். இந்த பங்களிப்பைத் தொடர்ந்து சில வாக்குறுதிகளையும் அவர்களின் அளித்து இருக்கின்றனர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் தங்களின் முக்கிய பங்களிப்பையும் வழங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது, சஸ்டெயினபிள் ஃப்யூச்சரை (நிலையான எதிர்காலத்தை) வழங்கும் முயற்சியில் தங்களின் பங்களிப்பு இருக்கும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். சிஓபி 28 மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Climate Change and Environment)-த்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. மஜித் அல் ஃபுட்டைம் ரீடெயில், கேரிஃபோர் எனும் பெயரில் அரபு நாடு முழுவதும் விற்பனையகங்களை அமைத்து உணவு மற்றும் உணவல்லாத பொருட்களின் வியாபரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இத்தகைய நிறுவனமே தற்போதைய மாநாட்டில் வழங்கப்பட்டு இருக்கும் இலக்குகளுக்கு தீவிரமாக பங்களிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இதற்கான உறுதிமொழியையும் அது எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், சில்லறை வர்த்தக பிரிவில் நிறுவனத்தின் இந்த முடிவு மிகப் பெரிய அறிவிப்பாக மாறி இருக்கின்றது. மேலும், அந்த அறிவிப்பின் வாயிலாக நமது பூமியின் சுற்றச்சூழல் பாதுகாப்பில் தனது பங்களிப்பையும் கேரிஃபோர் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Collaborative Impact Goals விபரங்கள்: மூன்று முக்கிய Collaborative Impact Goal-களை கேரிஃபோர் கொண்டுள்ளது. முதலில் பசுமை இல்ல வாயு உமிழ்வைச் சமாளிப்பதற்கான உறுதிப்பாட்டை கட்டாயமாக்குவது. கேரிஃபோர், அதன் விற்பனையகங்களில் கிடைக்கும் பொருட்களின் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கான உத்திகளை முதலில் அளவிட இருக்கின்றது. அத்துடன், இதுகுறித்து புகாரளிக்கவும், புகார்களின் அடிப்படையில் கார்பன் தடயத்தை அவர்கள் குறைக்கவும் இருக்கின்றனர்.

2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் கிலோகிராம் CO2 உமிழ்வைக் குறைப்பதை லட்சியமாகவும் நிறுவனம் கொண்டிருக்கின்றது. மேலும், கேரிஃபோர் அதன் ஸ்கோப் 3 உமிழ்வுகளில் குறிப்பிடத்தக்க 93% இந்த ஆணையின் மூலம் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியானது ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் அதன் விநியோகச் சங்கிலி முழுவதிலும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் பரந்த முயற்சிகளை ஏற்க உள்ளது.

மீதமுள்ள இரண்டு இலக்குகள், நிலையான பேக்கேஜிங்கில் கவனம் செலுத்த இருக்கின்றது. அதாவது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, எளிதில் மட்கக் கூடிய மற்றும் மறு சுழற்சி செய்யக் கூடிய பேக்கேஜிங்களை அது பயன்படுத்த இருக்கின்றது. கடைசியாக, தன்னை போலவே தன்னுடைய கூட்டாளர்களையும் அது கால நிலை மாற்றத்தில் மிக சிறப்பான பங்களிப்பை வழங்க வலியுறுத்த இருக்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+