பால் ஊற்றி வளர்த்ததற்கு இப்படி ஒரு சம்பவம் பண்ணிட்டியே.. 11 லட்சத்தை காலி செய்த பூனை.. நொந்து போன ஓனர்
பீஜிங்: வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை, தனது உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் கிட்சனுக்குள் புகுந்து அதகளம் பண்ணியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 லட்சம் உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.. அதிலும் சிலர் வீட்டில் எல்லாம் பெட்ரூம் முதல் கிட்சன் வரையிலும் நாய், பூனைகள் சுற்றி வரும். அதிலும் நாயை விட ஒரு படி மேலே பூனைக்கு வீட்டில் உரிமை உண்டு என்றே சொல்லலாம்..

பூனையால் வந்த வினை: உரிமையாளரின் படுக்கை அறையில் ஒரே படுக்கையில் படுத்து உறங்கும் அளவுக்கு பூனைகளுக்கு அலாதி உரிமை கிடைக்கும்... டிவி பார்த்தாலும் சரி.. செல்போன் பயன்படுத்தும் போதும் சரி.. உரிமையாளரின் மடியில் கிடந்து டிவி பார்த்துக்கொண்டு, தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற பேரப்பிள்ளைகளை போல பல வீடுகளில் பூனைகள் கொஞ்சி விளையாடிக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும்..
ஆனால், இதுபோன்ற செல்லப்பிராணிகள் சில சமயங்களில் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடும்... வீட்டில் உள்ள பொருட்களை தெரியாமல் தட்டி உடைத்து விடுவது.. வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எடுத்து சென்று வெளியே போட்டு விடுவது என சில நேரங்களில் செல்லப்பிராணிகள் மறக்க முடியாத சம்பவம் செய்து விடும்...
11 லட்சம் காலி: அப்படியான ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூனை செய்த சம்பவத்தால் 11 லட்சத்தை இழந்து இருக்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர்.. இது குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்..
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் தாண்டவன். இவர் தனது வீட்டில் ஜின்கோடியோவ் என்ற பூனையை வளர்த்து வந்தார். பூனையை செல்லமாக தாண்டன் வளர்த்து வந்தார். ஒருநாள், வீட்டை விட்டு தனது வேலைக்காக வெளியில் சென்று விட்டார். அப்போது வீட்டில் கிடந்த பூனை கிட்சனுக்கு சென்று தெரியாமல் இண்டக்ஷன் ஸ்டவ்வை ஆன் செய்து இருக்கிறது.
அலமாரியில் பம்மிய பூனை: பின்னர் வழக்கம் போல படுத்து உறங்க சென்று விட்டது.. ஆனால், இண்டக்சன் ஸ்டவ் தொடர்ந்து எரிந்ததால் சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பற்ற தொடங்கிவிட்டது. உடனே, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் தாண்டனிற்கு தகவல் கொடுத்ததோடு, தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்ற போது, பயந்து போய் ஒரு அலமாரியில் ஜின்கோடியோவ் என்ற அந்த விஷம பூனை படுத்து பம்மியிருந்தது. அந்த பூனையை பத்திரமாக மீட்ட தீ அணைப்பு படையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீ கட்டுக்குள் வந்த பிறகு உள்ளே சென்ற தாண்டன், வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் எரிந்து நாசமாகி கிடந்ததை பார்த்தார்.
தலையில் அடித்துக்கொண்ட உரிமையாளர்: இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.11 லட்சமாம்.. என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்ட தாண்டன்... உன்னை பால் ஊற்றி வளர்த்ததற்கு உன்னால என்ன முடியுமோ அதை பண்னிட்ட என நினைத்துக்கொண்டு ஜின்கோடியாவை கையில் சுமந்தபடியே வீட்டையே சோகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications