‘போப் 2–ம் ஜான்பால் ரத்தத்தை திரும்பத் தாருங்கள்’: திருடர்களுக்கு வாடிகன் வேண்டுகோள்
வாடிகன்: திருடிச் சென்ற புனிதப் பொருளை திரும்பத் தாருங்கள் என அதைத் திருடிய திருடர்களுக்கு வாடிகன் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
1978 அக்டோபர் முதல் 2005 ஏப்ரல் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2-ம் ஜான் பால். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை, 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானது மற்றும் வரலாற்றில் நீண்ட காலம் போப்பாக இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் எனப் பல சிறப்புகளைப் பெற்றவர் போப் 2-ம் ஜான் பால்.
இவரது ரத்தத்தில் நனைக்கப் பட்ட 'புனித துணித் துண்டொன்று' பெட்டியில் வைத்து பாதுகாக்கப் பட்டு வந்தது. தற்போது சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தற்போது அதனைத் திருப்பித் தந்து விடும் படி, திருடர்களுக்கு வாடிகன் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

புனிதப்பொருள்....
மறைந்த போப் ஆண்டவர் 2-ம் ஜான் பாலின் ரத்தம் தோய்ந்த ஒரு துண்டுத்துணி மிகவும் புனிதமானதாக உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் போற்றப்படுகிறது. விலை மதிப்பில்லாத இந்த புனிதத்துணி, தங்கத்தால் ஆன டப்பாவில் வைத்து கிழக்கு ரோமில் மலைப்பிரதேசமான சான்பீட்ரோ டெல்லா லென்கா என்ற இடத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஓய்வு....
போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போதெல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டு...
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் புனிதப் பொருள் வைக்கப் பட்டிருந்த தங்க டப்பாவை திருடர்கள் திருடிச்சென்று விட்டார்கள். திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேண்டுகோள்.....
கத்தோலிக்க கிறிஸ்தவர்களை வேதனையில் ஆழ்த்திய இந்தத் திருட்டுச் சம்பவத்தை அடுத்து, புனிதப் பொருளைத் திருடிச்சென்ற திருடர்கள், அதனை திரும்ப ஒப்படைத்து விடுமாறு வாடிகன் கேட்டுக்கொண்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications